Asianet News TamilAsianet News Tamil

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 

prabas salaar movie release date officially announced
Author
Chennai, First Published Feb 28, 2021, 4:21 PM IST

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்த படத்தின் தயாரிப்பை சமீபத்தில் அறிவித்தது.

prabas salaar movie release date officially announced

தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவுள்ள 'சலார்' என்கிற படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தையும் 'கே.ஜி.எஃப்' படத்தின் மூலம் ரசிகர்களை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் தான் இயக்குகிறார்.

prabas salaar movie release date officially announced

பிரமாண்ட பொருட்செலவில் உருகாகி வரும் இந்த படத்தில் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாகவே படு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். எனவே #salaar என்கிற ஹேஷ்டாக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios