MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்

Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்

MS A Legacy On Screen : எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'எம்.எஸ். எ லெகஸி ஆன் ஸ்கிரீன்' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 110வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
MS Subbulakshmi biopic
Image Credit : Asianet News

MS Subbulakshmi biopic

இந்திய இசை உலகில் அழியாத தடம் பதித்தவரும், பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசை மேதையுமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. ‘MS – A Legacy on Screen’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பயோபிக்கில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ‘மஜிலி’, ‘ஜெர்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி இந்த பயோபிக்கை இயக்கவுள்ளார்.

Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இசையாகவே வாழும் எம்.எஸ். சுப்புலட்சுமி
Image Credit : fb

இசையாகவே வாழும் எம்.எஸ். சுப்புலட்சுமி

தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இசை பாரம்பரியத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு. அவரது குரல் மொழி, மதம், பிராந்தியம் போன்ற எல்லைகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. பக்திப் பாடல்கள் முதல் கர்நாடக இசைக் கச்சேரிகள் வரை, அவரது குரல் இந்தியர்களின் இசை அனுபவத்தில் முக்கியமான பகுதியாக மாறியது.

அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது பாடல்கள் இன்றும் வீடுகள், கோவில்கள், இசை அரங்குகள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு இசை ஜாம்பவானின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த பயோபிக் உருவாகிறது.

35
பல ஆண்டுகளாக நடந்த பணிகள்
Image Credit : others

பல ஆண்டுகளாக நடந்த பணிகள்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சாதாரண முயற்சி அல்ல என்பதால், அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள், உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆவணங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் உள்ளிட்டவற்றை திரட்டும் பணியில் படக்குழு நீண்ட காலமாக ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது புகழை மட்டும் மையமாகக் கொள்ளாமல், உலகம் அறிந்த அந்த குரலுக்கு பின்னால் இருந்த மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை, கனவுகள், சவால்கள், போராட்டங்கள், மன உறுதி மற்றும் ஆன்மீக பயணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் படத்தில் பதிவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

45
எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா
Image Credit : others

எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா

இந்த அறிவிப்பில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது, எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பதுதான். இன்றைய தலைமுறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு, இந்திய இசை உலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரை திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் தோற்றம் மட்டுமின்றி, அவரது கலைப் பயணம், உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் ஆன்மீகத் தேடல் ஆகியவற்றையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ராஷ்மிகாவுக்கு இருக்கிறது.

55
பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் பயோபிக்
Image Credit : others

பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் பயோபிக்

பல தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை, இன்றைய ரசிகர்களுக்கும் புரியும் வகையில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்க படக்குழு தயாராகி வருகிறது. தனக்கே உரிய கதை சொல்லும் பாணியால் கவனம் பெற்றுள்ள கௌதம் தின்னனூரி, இந்த இசை மேதையின் வாழ்க்கையை எவ்வாறு திரையில் வடிவமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அனிருத்தின் இசை, ராஷ்மிகாவின் நடிப்பு, கௌதம் தின்னனூரியின் இயக்கம் என உருவாகும் இந்த கூட்டணி, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் பற்றிய மிகப்பெரிய சினிமா அனுபவமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Rashmika : கணவருடன் ஹாயாக ஹனிமூன் ட்ரீப் சென்ற ராஷ்மிகா மந்தனா... எந்த நாட்டுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Related Stories
Recommended image1
Rashmika Mandanna: அம்மாடி எவ்ளோ அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட ராஷ்மிகா!
Recommended image2
Rashmika: குட் நியூஸ் சொன்ன விஜய் - ராஷ்மிகா.! குவியும் வாழ்த்துக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved