MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rashmika : கணவருடன் ஹாயாக ஹனிமூன் ட்ரீப் சென்ற ராஷ்மிகா மந்தனா... எந்த நாட்டுக்கு தெரியுமா?

Rashmika : கணவருடன் ஹாயாக ஹனிமூன் ட்ரீப் சென்ற ராஷ்மிகா மந்தனா... எந்த நாட்டுக்கு தெரியுமா?

Rashmika and Vijay Deverakonda Honeymoon Trip : ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக ஹனிமூன் சென்றுள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 01 2026, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Rashmika and Vijay Deverakonda Honeymoon Trip
Image Credit : Instagram@rashmika_mandanna

Rashmika and Vijay Deverakonda Honeymoon Trip

பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது ஜப்பான் ட்ரிப்பின் புதிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார். அவரின் பாரம்பரிய யுகாட்டா லுக், ஜப்பானிய உணவுகள், கூடவே விஜய் தேவரகொண்டாவின் உடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ராஷ்மிகாவின் இன்ஸ்டா போஸ்ட்
Image Credit : Instagram@rashmika_mandanna

ராஷ்மிகாவின் இன்ஸ்டா போஸ்ட்

ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் தனது ஜப்பான் பயணத்தின் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார். 'இந்த வருஷம் ஜப்பான் இன்னும் ஜாலியா இருந்துச்சு!' என்று கேப்ஷன் போட்டுள்ளார். இந்த போட்டோக்களில், அவர் ஜப்பான் தெருக்களில் சுற்றுவதும், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணவுகளை ரசிப்பதும் தெரிகிறது.

Related Articles

Related image1
Rashmika Mandanna: அம்மாடி எவ்ளோ அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட ராஷ்மிகா!
Related image2
Rashmika Mandanna: விமர்சனங்களை படிக்கல்லாக மாற்றிய ராஷ்மிகா! தன்னை காயப்படுத்தியவர்களுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்தது எப்படி?
37
பாரம்பரிய உடையில் ராஷ்மிகா
Image Credit : Instagram@rashmika_mandanna

பாரம்பரிய உடையில் ராஷ்மிகா

ஜப்பானில் ராஷ்மிகா, பாரம்பரிய உடையான 'யுகாட்டா'வில் (Yukata) தோன்றினார். இது கிமோனோவின் இலகுவான வடிவம். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற சூரியகாந்திப் பூக்கள், பச்சை இலைகள் கொண்ட அழகான டிசைன் அந்த உடையில் இருந்தது. இடுப்பில் கட்டியிருந்த கருப்பு 'ஓபி' பெல்ட் மற்றும் கையில் இருந்த கோல்டு பிரேஸ்லெட் அவரின் லுக்கை இன்னும் சிறப்பாகக் காட்டியது.

47
விளையாடி மகிழ்ந்த ராஷ்மிகா
Image Credit : Instagram@rashmika_mandanna

விளையாடி மகிழ்ந்த ராஷ்மிகா

ஒரு வீடியோவில், நியான் நிறங்களில் இருந்த வட்ட வடிவ கற்களுக்கு இடையில் ராஷ்மிகா விளையாடி மகிழ்ந்தார். அவரின் துறுதுறுப்பான சேட்டைகளும், சிரிப்பும் அந்த வீடியோவின் ஹைலைட்டாக இருந்தது. இது தவிர, ஜப்பானின் அழகான இடங்களில் சுற்றித் திரிந்து, அந்தச் சூழலை அவர் ரசிக்கும் பல போட்டோக்களும் உள்ளன.

57
விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ்
Image Credit : Instagram@rashmika_mandanna

விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ்

இந்த போஸ்ட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமே, ராஷ்மிகா சில மங்கலான போட்டோக்களில் விஜய் தேவரகொண்டாவின் முகத்தைக் காட்டியதுதான். இதன் மூலம், அவர் இந்த ட்ரிப்பிற்கு தனியாகப் போகவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. போட்டோக்கள் தெளிவாக இல்லை என்றாலும், ரசிகர்கள் விஜய்யை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்.

67
விஜய் தேவரகொண்டாவின் டாலர் நோட் பண்ணீங்களா?
Image Credit : Instagram@rashmika_mandanna

விஜய் தேவரகொண்டாவின் டாலர் நோட் பண்ணீங்களா?

ராஷ்மிகாவும் விஜய்யும் இந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த ரிசப்ஷனில் ராம் சரண், நானி, கரண் ஜோஹர், கிருத்தி சனோன், அல்லு அர்ஜுன் என பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில் ஏர்போர்ட்டில் விஜய்யின் செயினில் இருந்த 'R' என்ற எழுத்து டாலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

77
கைவசம் உள்ள படங்கள்
Image Credit : Instagram@rashmika_mandanna

கைவசம் உள்ள படங்கள்

திருமணத்திற்குப் பிறகு ராஷ்மிகாவும் விஜய்யும் முதல்முறையாக 'ரணபலி' படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இது இருவரும் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம். ராகுல் சாங்கிருத்யன் இயக்கும் இந்தப் படம், 1854 முதல் 1878 வரையிலான காலகட்டத்தின் கதையை மையமாகக் கொண்டது. செப்டம்பர் 11 அன்று படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. விஜய் தற்போது 'VDxShouryuv' படத்திலும், ராஷ்மிகா 'காக்டெய்ல் 2' மற்றும் 'மைசா' படங்களிலும் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு முதலமைச்சரா? உண்மையை உடைத்து பேசிய கஸ்தூரிராஜா! யார் அந்த ஹீரோ தெரியுமா?
Recommended image2
Blast vs Karuppu Box Office Collection : கருப்பனின் வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததா பிளாஸ்ட்?
Recommended image3
Dhanush Political Entry : தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய அப்பா கஸ்தூரிராஜா
Related Stories
Recommended image1
Rashmika Mandanna: அம்மாடி எவ்ளோ அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட ராஷ்மிகா!
Recommended image2
Rashmika Mandanna: விமர்சனங்களை படிக்கல்லாக மாற்றிய ராஷ்மிகா! தன்னை காயப்படுத்தியவர்களுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்தது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved