MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rashmika : கிளாமர் உடைகள், பிகினி எனக்கு செட் ஆகாது.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா!

Rashmika : கிளாமர் உடைகள், பிகினி எனக்கு செட் ஆகாது.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா!

Rashmika Mandanna : படங்களில் அதிகப்படியான கிளாமர் காட்சிகளோ அல்லது பிகினி காட்சிகளோ இருந்தால் அதுதனக்கு பிடிக்காது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 25 2026, 06:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஆடை சர்ச்சை குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா
Image Credit : X

ஆடை சர்ச்சை குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா

தென்னிந்தியத் திரையுலகைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது சினிமாவில் நடிகைகளின் ஆடைத் தேர்வு மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'பெட்டி' திரைப்படத்தில் ஜான்வி கபூரின் தோற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், கிளாமரான உடைகளில் நடிப்பது குறித்து ராஷ்மிகா தெரிவித்துள்ள கருத்துகள் பேசுபொருளாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ராஷ்மிகா பேச்சு!
Image Credit : X

ராஷ்மிகா பேச்சு!

கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது சினிமாவில் நடிகைகள் அணியும் உடைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்காக அவர்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்து உரையாடல் நடைபெற்றது. ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'பெட்டி' படத்தில் ஜான்வி கபூரின் தோற்றம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களை முன்வைத்த கரண் ஜோஹர், திரைப்படங்களில் நடிக்கும்போது ஆடை விஷயத்தில் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா என ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, திரைப்படங்களில் நடிப்பதற்காக எந்தவிதமான உடையையும் அணியத் தயாராக இருப்பதில்லை என்றும், தனக்கென சில தனிப்பட்ட எல்லைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

36
கிளாமர் உடைகள் குறித்து ராஷ்மிகா சொன்னது என்ன?
Image Credit : Instagram

கிளாமர் உடைகள் குறித்து ராஷ்மிகா சொன்னது என்ன?

திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப்படும் உடைகள் தனக்கு வசதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என ராஷ்மிகா கூறியுள்ளார். சில கதாபாத்திரங்களுக்கு பிகினி உள்ளிட்ட கிளாமர்யான உடைகள் தேவைப்படலாம் என்பதைப் புரிந்துகொண்டாலும், அத்தகைய உடைகளை அணிவதில் தனக்கு விருப்பமில்லை என்பதை முன்கூட்டியே படக்குழுவினரிடம் தெரிவித்துவிடுவதாக அவர் விளக்கியுள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசிவிடுவதாகவும், தனக்கு ஏற்ற விஷயங்கள் எவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை எவை என்பதைத் தெளிவுபடுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார். கதாபாத்திரத்திற்காக நடிப்பில் மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராக இருந்தாலும், தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாகச் சில விஷயங்களைச் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது.

46
ராஷ்மிகாவுக்கு ஆதரவாகப் பேசிய விஜய் தேவரகொண்டா!
Image Credit : Instagram

ராஷ்மிகாவுக்கு ஆதரவாகப் பேசிய விஜய் தேவரகொண்டா!

இந்த உரையாடலின்போது ராஷ்மிகாவின் கருத்துக்கு விஜய் தேவரகொண்டாவும் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. திரைத்துறையில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு விருப்பமில்லாத விஷயங்களை எந்தவித அழுத்தமும் இல்லாமல் மறுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பெரிய திரைப்படங்களில் பணியாற்றும்போது தங்களது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்வது எல்லா கலைஞர்களுக்கும் எளிதான விஷயமாக இருப்பதில்லை. எனவே, அவர்கள் தயக்கமின்றித் தங்களது விருப்பங்களையும் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

56
நடிகைகளின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்!
Image Credit : Instagram

நடிகைகளின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

கமர்ஷியல் திரைப்படங்களில் சில நேரங்களில் கதாபாத்திரங்களுக்காக நடிகைகள் தங்களுக்கு வசதியில்லாத உடைகளை அணிய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற விஷயங்களில் தன்னுடைய விருப்பத்தை ஆரம்பத்திலேயே படக்குழுவினரிடம் தெரிவித்துவிடுவதாக ராஷ்மிகா கூறியுள்ளார்.

பெரும்பாலான நேரங்களில் இயக்குநர்கள் தனது நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும், அவர்களுடைய தனிப்பட்ட எல்லைகளைப் படக்குழுவினர் மதிக்க வேண்டும் என்றும் ராஷ்மிகா வலியுறுத்தியுள்ளார்.

66
ஜான்வி கபூரின் 'பெட்டி' படத்தில் என்ன சர்ச்சை?
Image Credit : Instagram

ஜான்வி கபூரின் 'பெட்டி' படத்தில் என்ன சர்ச்சை?

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்த திரைப்படம் 'பெட்டி'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜான்வி கபூரின் தோற்றம் மற்றும் ஆடை வடிவமைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக, அவரது கதாபாத்திரத்தின் நடிப்புத் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, கிளாமரான தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், திரைப்படங்களில் நடிகைகள் அணியும் உடைகள் அவர்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என ராஷ்மிகா தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. ஒரு நடிகை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அவரது சம்மதமும் முக்கியமானது என்ற கருத்தை இந்த விவாதம் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சின்ன படங்கள் வரக்கூடாதா? தியேட்டர் கேட்டு கெஞ்சுறோம்... ஜெயிலர்-2 உடன் மோதி கதறி அழுத ட்ரோன்ஸ் படத் தயாரிப்பாளர்!
Recommended image2
Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !
Recommended image3
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Recommended image2
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved