ஆகஸ்ட் 3, 2025 - தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள்: தமிழகத்தின் இன்று முக்கிய நிகழ்வுகள் ஆன அரசியல், வானிலை, ஜோதிடம், ஆடிப்பெருக்கு திருவிழா வரை லைவ் அப்டேட்ஸ் இங்கே பார்க்கலாம்.

10:36 PM (IST) Aug 03
ஜோ ரூட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனைகளை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
10:36 PM (IST) Aug 03
Weekly Horoscope 12 Zodiac Signs Predictions : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ஆகஸ்ட் 04 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
09:55 PM (IST) Aug 03
09:07 PM (IST) Aug 03
ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளியில், இஸ்ரேலிய பணயக்கைதி டேவிட் தனது கல்லறையைத் தோண்டுவது போல் காட்டப்பட்டுள்ளது. மிகவும் மெலிந்த டேவிட், தான் உயிருடன் புதைக்கப்படுவதாகக் கூறி கண்ணீர்விட்டு அழுகிறார்.
07:49 PM (IST) Aug 03
Kalanithi Maran Powerful Statement About Rajinikanth : ரஜினிகாந்த் எப்போது போன் போட்டாலும் இந்தியாவில் உள்ள முதல்வர்கள் மட்டுமின்றி பிரதமர் கூட உடனே போன் எடுப்பார் என்று கலாநிதி மாறன் கூறியுள்ளார்.
07:16 PM (IST) Aug 03
06:53 PM (IST) Aug 03
திரைப்படத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்குமார், தனது பயணம், ரசிகர்களின் அன்பு, மோட்டார் பந்தயம் மற்றும் குடும்பம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
05:26 PM (IST) Aug 03
05:23 PM (IST) Aug 03
சமீப காலமாக மனிதர்களிடையே ஞாபக மறதி அதிகரித்து வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
05:04 PM (IST) Aug 03
மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு தமிழ்நாடு அரசு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கடன் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என பார்க்கலாம்.
04:31 PM (IST) Aug 03
சிஎஸ்கே கேப்டன் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அவர் சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
04:23 PM (IST) Aug 03
உத்தரப் பிரதேசத்தில் வேலை தேடி வந்த நேபாளப் பெண் ஒருவர், திருடன் எனச் சந்தேகிக்கப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டார். மொட்டை மாடியில் இருந்து குதித்த அவரை, கும்பல் உருட்டுக்கட்டைகளால் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
04:20 PM (IST) Aug 03
குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம். ஆனால் இது பாதுகாப்பானதா என்பதற்கு மருத்துவர்கள் அளித்த விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
03:35 PM (IST) Aug 03
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனியில் மாடுகளை மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
03:16 PM (IST) Aug 03
03:00 PM (IST) Aug 03
குஜராத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'இரவு நேர விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், இல்லையெனில் வன்புணர்வுக்கு ஆளாவீர்கள்' போன்ற வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
02:48 PM (IST) Aug 03
குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவது ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை பொறுத்து மாறுபடலாம். ஆனால் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்.
02:13 PM (IST) Aug 03
தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர் மீதான மூன்று வழக்குகளில் கைது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
02:11 PM (IST) Aug 03
பீகார் மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பது மிகவும் ஆபத்தானது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
01:39 PM (IST) Aug 03
01:33 PM (IST) Aug 03
தும்மும் போது, இருமும் போது, சிரிக்கும்போது சிறுநீர் வெளியேறுவது என்பது சிறுநீர் அடங்காமை (Stress Urinary Incontinence) என்று அழைக்கப்படும் ஒரு உடல் நலப் பிரச்சனையாகும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:19 PM (IST) Aug 03
01:02 PM (IST) Aug 03
12:40 PM (IST) Aug 03
சுப்மன் கில்லின் மாஸ்டர் பிளானால் சாக் கிராலியின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
12:34 PM (IST) Aug 03
உடல் எடையானது திடீரென, எந்த வித காரணமின்றி குறைவது என்பது தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். உடல் எடையில் ஏற்படும் இந்த மாற்றம் சில நேரங்களில் ஆபத்தான நோய்களுக்கான எச்சரிக்கை மணியாகும்.
11:51 AM (IST) Aug 03
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாகர்ஜூனா, ஒரு கூலி படம் 100 பாட்ஷா படங்களுக்கு சமம் என்று ரஜினி ஸ்டைலில் பேசி அசத்தியுள்ளார்.
11:34 AM (IST) Aug 03
ஓபிஎஸ் தன்னிடம் பேசவில்லை. நான் தான் அவரிடம் பேசினேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நயினாருக்கு தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார்.
11:27 AM (IST) Aug 03
சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
10:21 AM (IST) Aug 03
எண் கணிதத்தின் படி நாம் பிறந்த தேதியை வைத்து நாம் என்ன தொழில் செய்தால் முன்னேற முடியும் என்று கணிக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
10:16 AM (IST) Aug 03
பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.
10:12 AM (IST) Aug 03
08:57 AM (IST) Aug 03
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
08:50 AM (IST) Aug 03
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 8 வரை பரவலாக மழை பெய்யும். இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:35 AM (IST) Aug 03
ஆகஸ்ட் 15, 2025 முதல், NHAI புதிய FASTag வருடாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. வெறும் ரூ.3,000, இந்த சலுகை தினசரி நெடுஞ்சாலை பயணிகளுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும்.
07:26 AM (IST) Aug 03
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PMSYM) திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
06:51 AM (IST) Aug 03