Coolie : ரஜினி Call பண்ணா சிஎம் என்ன பிரதமரே Call எடுப்பார் – கலாநிதி மாறன்
Kalanithi Maran Powerful Statement About Rajinikanth : ரஜினிகாந்த் எப்போது போன் போட்டாலும் இந்தியாவில் உள்ள முதல்வர்கள் மட்டுமின்றி பிரதமர் கூட உடனே போன் எடுப்பார் என்று கலாநிதி மாறன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், கூலி டிரைலர், கூலி இசை வெளியீட்டு விழா
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் கூலி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கூலி படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அமீர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் என்று அனைவரும் படம் மற்றும் சக நடிகர், நடிகைகள் பற்றி பேசினர். தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ரஜினிகாந்த் குறித்து முக்கியமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
ரஜினி கூலி ரிலீஸ் தேதி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெசி ஆகியோர் பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கூலி, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்
இதில், ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். சத்யராஜின் மகள் தான் ஸ்ருதி ஹாசன் (பிரீத்தி ராஜசேகர்). கூலி படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது சத்யராஜிற்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது. இதன் காரணமாக அவரை காப்பாற்றவோ அல்லது அவரது மகளுக்காகவோ ரஜினிகாந்த் வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
ரஜினிகாந்த் கூலி இசை வெளியீட்டு விழா
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ரஜினிகாந்த் பற்றி வெளிப்படையாக பேசிய கலாந்தி மாறன்
இந்த நிலையில் தான் கூலி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் பேசினர். தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் பேசினார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரஜினி ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் மட்டும் கிடையாது. அவர் தான் ஒன்லி சூப்பர் ஸ்டார். இந்தியாவில் உள்ள எந்த முதல்வருக்கும் அவர் போன் போட்டாலும் ஒரு நொடியில் அவரது போனை எடுப்பார்கள். இவ்வளவு ஏன் பிரதமர் கூட ரஜினியின் போன் காலை உடனே எடுத்துவிடுவார் என்று பேசினார்.
மேலும், ஒரூ சில ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களுக்கு போன் போட்டால் அவர்கள் போன் எடுப்பதில்லை. ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை, இன்றும் போன் போட்டால் உடனே போன் எடுத்து பேசுவார். அவர் நேர்மையான மற்றும் பணிவானவர். கடினமான உழைப்பாளி என்று சுட்டிக்காட்டி பேசினார்.