33 வருஷ சினிமா... சுயநலத்துக்கு ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்... நடிகர் அஜித் நெகிழ்ச்சி
திரைப்படத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்குமார், தனது பயணம், ரசிகர்களின் அன்பு, மோட்டார் பந்தயம் மற்றும் குடும்பம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் அஜித்தின் 33 வருடங்கள்
திரைப்படத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அஜித்குமார், தனது பயணம், ரசிகர்களின் அன்பு, மோட்டார் பந்தயம் மற்றும் குடும்பம் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்" என்று அஜித் தனது அறிக்கையைத் தொடங்கினார்.
விடாமுயற்சி பற்றி அஜித் குமார்
"இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் என் சுய முயற்சியால் மட்டுமே நுழைந்தேன். காயங்கள், தோல்விகள், அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. ஏனெனில், விடாமுயற்சி என்பதை நான் வெறுமனே கற்றுக்கொள்ளவில்லை; அதை பரிசோதித்து வாழ்ந்து வருகிறேன். என் வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதெல்லாம் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வரச் செய்தது" என்று ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
மோட்டார் ரேசிங் ஒரு சவால்
சினிமா மட்டுமல்லாது, மோட்டார் ரேசிங்கிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். "மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் உங்களை மன்னிக்காது. பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. இருந்தும் தொடர்ந்து பயணிக்கிறேன். இது விருதுகளுக்காக அல்ல; ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலியின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க" என்றார்.
"அஜித்குமார் மோட்டார் ரேசிங் என்ற பெயரில் 2025-ல் மீண்டும் விளையாட்டுத் துறைக்கு வந்திருப்பது, வயது வரம்பு, அச்சம், தடைகள் பார்த்துத் தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான்" என்று அவர் தெரிவித்தார்.
பத்ம பூஷண் விருது
தனது சினிமா பயணத்தில் உதவிய இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். "எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை பலப்படுத்திய இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய அரசுக்கு நன்றி" என்றும் குறிப்பிட்டார்.
தனது வாழ்வின் பலம் மனைவி ஷாலினி என்றும், பிள்ளைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் தன் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள் என்றும் கூறினார்.
பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி
தனது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்த அஜித், "நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும், பேசாமலும் இருக்கலாம். ஆனால் உங்களை மகிழ்விப்பதில் தவறியது இல்லை" என்று ரசிகர்களிடம் உறுதியளித்தார்.
"என் நிறை, குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்" என்று கூறி தனது அறிக்கையை நிறைவு செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

