ஆம்பளைங்க தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க... புயலைக் கிளப்பிய ரவி மோகனின் சூசக பதிவு
நடிகர் ரவி மோகன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டுள்ள சூசக பதிவு ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Ravi Mohan Cryptic Post
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமண வாழ்க்கை, விவாகரத்து விவகாரம் மற்றும் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த காலத்தில் கோலிவுட்டில் மிகவும் பேசப்பட்ட காதல் திருமணங்களில் ஒன்றாக இவர்களின் திருமணம் கருதப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலம் அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்த இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப விஷயங்களை பெரும்பாலும் தனிப்பட்டதாக வைத்திருந்த இவர்களை ரசிகர்கள் பலரும் ஒரு சிறந்த தம்பதிகளாகவே பார்த்து வந்தனர்.
ரவி மோகன் விவாகரத்து
ஆனால் 2024ஆம் ஆண்டு இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோருக்கிடையே நெருக்கமான உறவு இருப்பதாக சில வதந்திகளும் பரவத் தொடங்கின. இருவரும் சில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இந்த சூழ்நிலையில், ரவி மோகன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு அவர் நேரடியாக பதிலளித்துள்ளார்.
ரவி மோகன் பதிவு
அவர் அந்த பதிவில், “என் வாழ்க்கையை நான் அமைதியாக கட்டமைத்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பெண்கள் செய்வது மட்டுமே சரி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மை மறுக்க முடியாது. நமது நீதித்துறையும் அதை ஏற்றுக்கொள்கிறது.
ஒருநாள் என் மனதைவும், நான் என் அன்புக்குரியவர்களுக்காக செய்த விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஒரு மனிதனை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் என் பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
மேலும் இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் “வாழ்க்கை என்பது அன்பினில்” என்ற பாடல் ஒலிக்கிறது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரவி மோகனின் இந்த பதிவு வெளியானதையடுத்து இணையத்தில் கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க, மற்றவர்கள் இந்த விவகாரம் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

