- Home
- Cinema
- Coolie: ஒரு கூலி படம் 100 பாட்ஷா படங்களுக்கு சமம் – ரஜினி ஸ்டைலில் பேசி மாஸ் காட்டிய வில்லன் நாகர்ஜூனா!
Coolie: ஒரு கூலி படம் 100 பாட்ஷா படங்களுக்கு சமம் – ரஜினி ஸ்டைலில் பேசி மாஸ் காட்டிய வில்லன் நாகர்ஜூனா!
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாகர்ஜூனா, ஒரு கூலி படம் 100 பாட்ஷா படங்களுக்கு சமம் என்று ரஜினி ஸ்டைலில் பேசி அசத்தியுள்ளார்.

கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
நாகர்ஜூனா
அப்போது பேசிய நாகர்ஜூனா கூறியிருப்பதாவது" ஒரு 'கூலி' திரைப்படம், 100 'பாட்ஷா' திரைப்படங்களுக்கு சமமானது. நான் படத்தில் 'சைமன்' என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
வில்லன் நாகார்ஜூனா
இதே போன்று ரஜினிகாந்த் பேசும் போது, நாகர்ஜூனின் வில்லன் ரோல் குறித்து பேசினார். அதில், மெயின் வில்லனாக நாகார்ஜுனாவை தேர்வு செய்தபோது, ஓகே சொல்லமாட்டார் என்று நான் நினைத்தேன், அவரை காசு, பணம் கொடுத்து வாங்க முடியாது. வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தாவில் அஜித் ஒரு டயலாக் பேசுவார், அதாவது, எத்தனை நாள் தான் நானும் நல்லவனாகவே நடிப்பது. அது நாகர்ஜூனாவிற்கு பொருந்தியது.
நாகார்ஜூனா ஃபிட்னஸ் ரகசியம்
இத்தனை நாட்கள் ஹீரோவாக நடித்து இன்று வில்லனாக கலக்கியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகர்ஜூனாவை பார்க்கும் போது எனக்கு ஒரே ஷாக். இத்தனை வயதுக்கு பிறகும் கூட இன்னும் இளமையாக ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், மாலை 6.30 மணிக்கு இரவு உணவு முடித்து விடுதாக கூறினார். உடலுக்கு எது ஒத்துக் கொள்ளும், எது ஒத்துக் கொள்ளாது என்பதை தெரிந்து கொண்டால் போதும் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.