MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வங்கிகளில் 10,277 காலியிடங்கள்! டிகிரி முடித்திருந்தால் போதும்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வங்கிகளில் 10,277 காலியிடங்கள்! டிகிரி முடித்திருந்தால் போதும்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Aug 03 2025, 10:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
10,277 Vacancies In Public Sector Banks
Image Credit : Google

10,277 Vacancies In Public Sector Banks

இந்தியாவில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு மாநில அரசு மற்றும் மத்திய அரசுத் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், அர‌சு வேலை பெற வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்காக பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

24
வங்கிகளில் 10,277 காலி பணியிடங்கள்
Image Credit : Google

வங்கிகளில் 10,277 காலி பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தான் இப்போது 10,277 கிளர்க் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியைத் தவிர்த்து இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட 11 பொதுத்துறை வங்கிகளில் இந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 894, புதுச்சேரியில் 19, உத்தரப் பிரதேசத்தில் 1315, மகாராஷ்டிராவில் 1117, கர்நாடகாவில் 1170, குஜராத்தில் 753 காலியிடங்கள் இருக்கின்றன.

Related Articles

Related image1
டோட்டலா மாறப் போகுது திருவண்ணாமலை.! கொட்ட போகுது வேலைவாய்ப்பு- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல்
Related image2
10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 1446 காலியிடங்கள்..
34
விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
Image Credit : Google

விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)அக்டோபர் 4, 5 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும். முதன்மைத் தேர்வு (Main Exam)நவம்பர் 29 அன்று நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் முடித்தவர்கள் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு என்ன?

ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்). விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்திய மொழியில் புலமை பெற்றிருப்பது மிகவும் முக்கியமாகும்.

44
தேர்வு முறை எப்படி இருக்கும்?
Image Credit : Ai Meta

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே இறுதித் தேர்வுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 850 மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ. 175 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வங்கி
வேலைவாய்ப்பு
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved