போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

05:50 PM (IST) Sep 15
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
05:31 PM (IST) Sep 15
ஒட்டுமொத்த நிதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சங்கு சங்கர் பேசி இருந்த நிலையில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று அவருக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது சவுக்கு சங்கர் அதில் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது, அவரை போலீசார் சுற்றி வளைத்தனர், அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போதைய சவுக்கு சங்கருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
04:51 PM (IST) Sep 15
NIEPMD தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
04:04 PM (IST) Sep 15
மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் படிக்க
03:33 PM (IST) Sep 15
தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
03:00 PM (IST) Sep 15
எடப்பாடிக்கு போதிய அனுபவமும் ஆற்றலும் இல்லையென்ற தெரிவித்தவர், இதன் காரணமாக நடைப்பெற்ற மூன்று தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடித்ததாக அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
02:54 PM (IST) Sep 15
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:30 PM (IST) Sep 15
IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
02:04 PM (IST) Sep 15
CUET UG 2022: மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான சியுஇடி தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
01:35 PM (IST) Sep 15
மதுரையில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த, முதல்வரை தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் நாக விஷால் சந்தித்து ஆசி பெற தன்னுடைய தாயுடன் பல மணிநேரம் காத்திருந்தும், முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் செய்திகள்...
01:35 PM (IST) Sep 15
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்றும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து சவுக்கு சங்கர் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
01:24 PM (IST) Sep 15
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜவான்' படப்பிடிப்புக்கு சென்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
01:19 PM (IST) Sep 15
இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் குஷ்பூ.
01:14 PM (IST) Sep 15
நீட் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான ( NEET PG Counselling 2022) கலந்தாய்வு முதல் சுற்று இன்று தொடங்கியது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in-ல் பதிவு செய்துக் கொள்ளலாம். தற்காலிக அட்டவணைப்படி, முதல் சுற்றுகள் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் படிக்க
12:33 PM (IST) Sep 15
படம் குறித்த நல்ல கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்த படத்தைக் காண காத்திருப்பதாகவும் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.
12:02 PM (IST) Sep 15
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பதவிக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கணினி வழி தேர்வு நடத்தப்படும் . அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
11:08 AM (IST) Sep 15
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை. சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேர் சாதாரண காய்ச்சலா பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.மேலும் படிக்க
11:07 AM (IST) Sep 15
ஸ்ரீதேவி அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் பாகுபலியில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
11:03 AM (IST) Sep 15
இதுவரை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் வார இறுதி வசூலில் சாதனையும் படைத்த டாப் 5 படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்...
10:43 AM (IST) Sep 15
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது அப்பகுதி மக்களுடைய ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்குமாறும், ஒப்புதலைப் பெற முடியாவிட்டால் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
10:30 AM (IST) Sep 15
மாணவச் செல்வங்களே நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காலையும், மதியமும் உணவளித்து உங்களுடைய மற்ற தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
09:59 AM (IST) Sep 15
இந்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க...
09:33 AM (IST) Sep 15
மகேஷ் பாபுவுடனான அடுத்த படத்தை ஜேம்ஸ் பாண்ட், இந்தியானா ஜோன்ஸுடன் ஒப்பிடுகிறார் எஸ்எஸ் ராஜமௌலி.
09:09 AM (IST) Sep 15
ஓபிஎஸ்ஐ மட்டும் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறவில்லை எல்லாரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று தான் கூறுகிறேன். நீங்கள் ஏன் பிரித்து பிரித்து பார்க்கிறீர்கள் என சசிகலா கேள்வி எழுப்பினார்
மேலும் படிக்க..
09:08 AM (IST) Sep 15
நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களை தான், அடிப்படை தொண்டர்கள் அதிமுக எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
08:32 AM (IST) Sep 15
செகண்ட் ஹாப் பக்காவான பேக்கேஜாக உருவாகியுள்ளதாகவும் ஆனாலும் சிம்புவின் வழக்கமான மாஸ் பஞ்ச் டயலாக் எல்லாம் இந்த படத்தில் கிடையாது என்றும் ரசிகர்கள் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து தணிந்தது காடு.. என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம்
07:51 AM (IST) Sep 15
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவானின் நிலை மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும்.
07:51 AM (IST) Sep 15
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை, சாதாரண மக்கள், தொழில் துறையினர் மீது சுமத்துவது ஈவு இரக்கமற்ற செயல் என கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
07:38 AM (IST) Sep 15
வெந்து தணிந்தது காடு படம் குறித்தான ட்விட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்க்கலாம். பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே வெந்து தணிந்தது காடு பெற்றுள்ளது.
07:29 AM (IST) Sep 15
இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
07:29 AM (IST) Sep 15
சென்னையில் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.