'ஜெயிலர்' படப்பிடிப்பின் போது 'ஜவான்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ரஜினி! ஷாருக்கானுடன் நடந்த சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜவான்' படப்பிடிப்புக்கு சென்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு நடைபெறும், இதே ஸ்டுடியோவில் தான், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கன் நடித்து வரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. தற்போது ஷாருக்கான் - நயன்தாரா ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.
இந்த தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக 'ஜெயிலர்' படப்பிடிப்பில் இருந்து விரைந்து சென்று, 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த ஷாருகானை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், இவர்களுடைய சந்திப்பு சிலமணி நேரம் நடந்ததாகவும், அப்போது இருவரும் சினிமா மற்றும் தங்களை பற்றி பேசிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து, 'ஜெயிலர்' படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில், முக்கிய அப்டேட்டுகளை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுவதால், தலைவரின் ரசிகர்கள் படு குஷியாகியுள்ளனர்.