- Home
- Cinema
- என்கூட நடிக்க மறுத்த நடிகைகள் இப்போ என் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறாங்க - கென் கருணாஸ் பளீச் பேட்டி
என்கூட நடிக்க மறுத்த நடிகைகள் இப்போ என் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறாங்க - கென் கருணாஸ் பளீச் பேட்டி
நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்குனராகவும் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ள யூத் திரைப்படத்தில் தமிழ் நடிகைகள் நடிக்க மறுத்ததாக கென் கருணாஸ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Ken Karunas Befitting Reply to Actress
இளம் நடிகர் கென் கருணாஸ் 'யூத்' என்ற தனது படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்கி கதாநாயகனாக நடிப்பதும் கென் கருணாஸ் தான். நகைச்சுவை வேடங்கள் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் நடிகர் கருணாஸின் மகன் தான் கென். சில நடிகைகள் தன்னுடன் நடிக்கத் தயாராக இல்லாததால்தான் மலையாள நடிகைகளை நடிக்க வைத்ததாக கென் கூறியது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. தன்னோடு நடிக்க மறுத்த நடிகைகள் தற்போது தன் பட பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுகிறார்கள் என்றும் கென் தெரிவித்துள்ளார்.
கென் கருணாஸ் ஆதங்கம்
பிரதீப் ரங்கநாதன், அபிஷான் போன்றவர்கள் தங்களுடன் கதாநாயகியாக நடிக்க யாரும் தயாராக இல்லை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்போது அதெல்லாம் சும்மா சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால், நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிகைகள் நடிப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் உண்மையில் நடிகைகள் நடிக்கத் தயாராக இல்லை. அனுதாபத்தை பெறுவதற்காக அப்படிச் சொல்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் அதுதான் நிதர்சனம்.
நடிக்க மறுத்த நாயகிகள்
நான் படத்தின் கதையைச் சொல்லும்போது, மூன்று கதாநாயகிகள் உள்ள படத்தில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று கேட்பார்கள். நான் ஏன் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி சமாதானப்படுத்தும்போது, அவர்கள் தாங்கள் விரும்பும் வேறு ஒரு கதாபாத்திரத்தைக் கேட்பார்கள். எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். பல நடிகைகள் என் மெசேஜைப் பார்த்துவிட்டு பதிலளிக்கவில்லை.
ரீல்ஸ் போடும் நடிகைகள்
ஆனால் இன்று அதே நடிகைகள் என் படத்தின் ‘முட்ட கலக்கி’ பாடலுக்கு ரீல்ஸ் செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று அவர்கள் என்னை எடை போட்டார்கள். ஆனால் என்னை எடை போடாமல் என் கதையை நம்பி வந்த மூன்று பேர்தான் இப்போது என் கதாநாயகிகள். என்னை நம்பி வந்த அவர்களால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். யூத் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

