ஜெயலலிதாவை பார்ப்பதை போல் மக்கள் என்னை பார்க்கிறாங்க.! அதிமுகவில் நடக்கபோவதை பொறுத்திருந்து பாருங்கள்- சசிகலா
ஓபிஎஸ்ஐ மட்டும் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறவில்லை எல்லாரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று தான் கூறுகிறேன். நீங்கள் ஏன் பிரித்து பிரித்து பார்க்கிறீர்கள் என சசிகலா கேள்வி எழுப்பினார்
சசிகலா சுற்றுப்பயணம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக ச்சிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ச்சிகலா கொங்குமண்டலத்தில் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். சேலம், ஈரோடு பகுதியில் தொண்டர்களை சந்தித்த அவர் திமுக அரசை விமர்சித்தும், அதிமுக தற்போது ஏற்பட்டுள்ள பிளவு கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என கூறி வருகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெரும் என தெரிவித்த சசிகலா, திமுக தேர்தல் அறிக்கை அறிவித்த எதையும் நிறைவேற்றவில்லை என கூறினார். தேர்தல் அறிக்கை 505 வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்தது மிகப்பெரிய புத்தகமாகவும் வெளியிட்டிருந்தது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு என்பது ஏழை மக்களை மிகவும் பாதிக்கக்கூடிய விஷயம் என குறிப்பிட்டார். 200 சதவீதம் யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் சுமார் 63% பேர் தமிழகத்தில் உள்ளனர். 500 யூனிட் வரைபயன்படுத்துபவர்கள் 10% பேர் உள்ளனர். பெரும்பாலும் ஏழைகள் மக்கள் மீது திமுக அரசு கைய வைத்து விட்டார்கள்.
மின் கட்டண உயர்வு-பொதுமக்கள் பாதிப்பு
இதேபோல சிறு குறு தொழிலகம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்களை தமிழகத்தில் தொடங்க இருப்பதாக திமுக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் மின் கட்டண உயர்வு காரணமாக சிறுகுறு தொழில்கள் மூடப்படும் நிலைக்குத் தளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் அப்போது மக்கள் என்னை பார்க்கிறதும் நான் மக்களை பார்ப்பதும், மக்கள் என்னை பார்த்து அன்பா பழகுற விதமும் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நம்பியது போல் இவர்களை நம்பினால் நல்லது செய்வார்கள் என நினைக்கிறார்கள்.
பொறுத்திருந்து பாருங்கள்
அனைத்து பகுதி மக்களிடமும் அந்த நம்பிக்கை தெரிகிறது. நல்லது நடக்கும் என்று நினைக்கிறார்கள் கண்டிப்பாக மக்களுக்கான நல்லது நடக்கும் என கூறினார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவரை சேர்த்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓபிஎஸ்ஐ மட்டும் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறவில்லை எல்லாரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று தான் கூறுகிறேன். நீங்கள் ஏன் பிரித்து பிரித்து பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் இருக்கிற ஒவ்வொரு தொண்டர்களும் எனக்கு முக்கியம். அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
“சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”