Asianet News TamilAsianet News Tamil

செங்கலை காட்டி வாக்கு சேகரித்த உதயநிதி..! அந்த செங்கலை வைத்தாவது அடிக்கல் நாட்டுவாரா முதல்வர்- ஆர்பி உதயகுமார்

நாடாளும்ன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது செங்கலை எடுத்துக்காட்டி திமுகவினர் வாக்கு சேகரித்தனர். எனவே உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா.? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Former Minister RB Udayakumar demanded that water be released from Vaigai Dam for agriculture
Author
First Published Sep 14, 2022, 1:49 PM IST

வைகை அணை திறக்க வேண்டும்

வைகை அணையில் இருந்து விவசாயிகள் பயனடையும் வகையில் நீரை திறந்து விடக்கோரி  மதுரை மாவட்ட ஆட்சியரை சந்த்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை மனுவை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிட்ம பேசிய அவர்,  70.44அடி தண்ணீர் உள்ள வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகள் நலனை புறக்கணிக்கிற அரசாக, விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார். இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சனையை கவனத்தில் கொள்ளாவார் என்ற நம்பிக்கையோடு இதை தெரிவிப்பதாக கூறினார். 110 வருவாய் கிராம மக்களின் குடிநீர் ஆதரமாகவும், 2500ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.58ம் கால்வாய் திட்டத்திற்கு 140 நாட்களுக்கு 316 கன அடி நீர் திறக்க வேண்டும். முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Former Minister RB Udayakumar demanded that water be released from Vaigai Dam for agriculture

 அம்மா அரங்கம்- கலைஞர் அரங்கம்

முல்லைப்ரியாறு அணை உரிமையை பெற்றுத்தந்தற்காக விவசாயிகள் விழா எடுத்த அம்மா திடலை கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள். ரூல்கர்வ் என்ற அடிப்படையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரை திறந்து கொள்கிறார்கள். சர்வாதிகார போக்குடன்  செயல்படுகின்றனர். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் விவசாயிகளுக்கு முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா தன் மெளன விரதத்தை கலைப்பாரா உரிய விளக்கம் கொடுக்க முன் வருவாரா என கேள்வி எழுப்பினார். 

5000 மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் காவல்துறை...! 8 இடங்களுக்கு சுற்றுலா..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Former Minister RB Udayakumar demanded that water be released from Vaigai Dam for agriculture

 எய்ம்ஸ் மருத்துவமனை

முப்பெரும் விழா ஐம்பெரும் விழா ஐப்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் சரியாக கிடைப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதல்வருக்கு தெரியுமா?தெரியாதா ?என தெரியவில்லை. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது செங்கலை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தனர். எனவே உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா.? என கேள்வி எழுப்பினார். கலைஞர் நூலகத்தை பத்துமுறைக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர் நோய்தீர்க்கும் மருத்துவத்திற்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா எனவும் ஆர்பி உதயகுமார் வினவினார்.

இதையும் படியுங்கள்

50 ஆயிரம் கோடிக்கு அதிபதி செந்தில் பாலாஜி.? நோட்டா கிட்ட வச்சுக்கோ எங்க ஏட்டா கிட்ட வேணாம்.? திமுக- பாஜக மோதல்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios