'சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்' கொதித்தெழுந்த பாஜக, போலீசிடம் புகார்..கைதாகிறாரா ஆ ராசா..?
இந்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு
முன்னாள் அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக இருக்கும்.. உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும்.சில சமயம், ராசாவின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும், அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு தொடர்பாக சர்ச்சையான கருத்து வெளியானது. இந்த கருத்து அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து தனது பிரச்சாரத்தை ஆ.ராசா நிறுத்திக்கொண்டார். இதே போல நாமக்ல்லில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பாக பேசியிருந்தார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஒரு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பாஜக கடுமையாக விமர்சித்து இருந்தது.
ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரம்… மௌனம் காக்கும் திமுக… செய்தியாளர்களிடம் இருந்து நழுவும் சேகர்பாபு!!
ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்
இந்தநிலையில் தற்போது புதிய சர்ச்சையில் ஆ.ராசா சிக்கியுள்ளார்.அது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வைரலாகிவருகிறது. அதில் ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியது போல் காட்சி வெளியானது. இதற்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
ஆ.ராசா மீது போலீசில் புகார்
இதனையடுத்து பல மாவட்டங்களில் ஆ.ராசாவிற்கு எதிராக எதிர்ப்பு குரலும் எழும்பியது. இந்தநிலையில் மதுரவாயில் பாஜகவினர் ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர். இது போன்று தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை ஆ.ராசா கூறி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்