ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரம்… மௌனம் காக்கும் திமுக… செய்தியாளர்களிடம் இருந்து நழுவும் சேகர்பாபு!!

திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் திமுக மற்றும் அமைச்சர்கள் மௌனம் காத்து வரும் நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவினார். 

dmk keeps silent in raja controversy speech issue and sekarbabu refused to talk about issue

திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் திமுக மற்றும் அமைச்சர்கள் மௌனம் காத்து வரும் நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவினார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?

இதையும் படிங்க: “சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”

dmk keeps silent in raja controversy speech issue and sekarbabu refused to talk about issue

இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்று இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

dmk keeps silent in raja controversy speech issue and sekarbabu refused to talk about issue

இதற்கு பாஜக உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது வரை இந்த விவகாரத்தில் திமுக மௌனம் காத்து வருகிறது. திமுக மட்டுமல்ல, அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இதுக்குறித்து வாய்த்திறக்கவில்லை. அந்த வகையில் திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும்  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் இருந்து நழுவினர்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios