Asianet News TamilAsianet News Tamil

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் பிரமாண்டமாக உருவாகும் மகேஷ்பாபு - ராஜமௌலி கூட்டணி.. இயக்குனரின் சுவாரஸ்ய தகவல் இதோ

மகேஷ் பாபுவுடனான  அடுத்த படத்தை ஜேம்ஸ் பாண்ட், இந்தியானா ஜோன்ஸுடன் ஒப்பிடுகிறார் எஸ்எஸ் ராஜமௌலி.

ss rajamouli compares next film with mahesh babu like to james bond indiana jones
Author
First Published Sep 15, 2022, 9:28 AM IST

நான் ஈ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி. அந்த படம் இயக்குனருக்கு மாபெரும் வெற்றிகளை குவித்தது. இவர் முன்னதாக இயக்கியிருந்த ஜூனியர் என்டிஆரின் ஸ்டூடண்ட் நம்பர் ஒன், ராம்சரனின் மாவீரன்  உள்ளிட்ட படங்கள் பிளாக் பாஸ்டர் படங்களாக அமைந்தன. ஆனால் இவை அனைத்தும் அந்த ஹீரோக்களால் தான் நடந்தது என பலரும் பேசியதால் மனம் நொந்த இயக்குனர் நாயகனை மட்டுமல்ல வைத்தல்ல ஈயை கூட நான் நடிக்க வைப்பேன் என இயக்கியிருந்த படம் தான் நான் ஈ.  பின்னர் இவரின் பாகுபலி ஒன்று மற்றும் பாகம் இரண்டு இரண்டு ஆகிய இரு படங்களும் உலக அளவில் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றது. ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த இதுவரை முன்னிலையில் இருந்து வருகிறது பாகுபலி சீரிஸ்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கியிருந்த ஆர்ஆர்ஆர் படமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட், டோலிவுட்  என அனைத்து நடிகர்களையும் களமிறக்கி இருந்தார் ராஜமௌலி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படமும் வசூலை வாரிக்குவித்திருந்தது. தற்போது இவர் மகேஷ்பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் உள்ளார்.மேலும் செய்திகளுக்கு... சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து தணிந்தது காடு.. என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம்ss rajamouli compares next film with mahesh babu like to james bond indiana jones

சமீபத்தில் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா படம் வெளியாகியிருந்தது ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இதனால் ராஜமௌலியுடனான படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு  கூட்டணிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் இறுதி செய்யப்படவில்லை ஆனால் இந்த படம் ஒரு அதிரடி சாகச படமாக இருக்கும் என்று இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து வரும் டோராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ராஜமவுலி படம் பற்றி பேசி உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் போன்ற கிளாசிக் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மகேஷ்பாபுவின் படம் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...  விமர்சனங்களால் எழுச்சி பெரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு...ட்வீட்டர் ரிவ்யூக்கள் என்ன சொல்கிறது ?

அதோடு மகேஷ்பாபு உடன் எனது அடுத்த படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகசமாக இருக்கும் இது ஒரு வகையான ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியானா ஜோன்ஸ் படமாக இந்திய வேர்களை கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல ராஜமவுளியின் தந்தையான எழுத்தாளர் கே.வி. விஜயேந்திரன் காடுகளின் பின்னணிகள் எடுக்கப்படும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் இன்னும் எழுதி முடிக்கவில்லை என்று முன்பு வெளியறங்கில் தெரிவித்திருந்தார்.

ss rajamouli compares next film with mahesh babu like to james bond indiana jones

மேலும் செய்திகளுக்கு...10 ஆண்டுகளை நிறைவு செய்த..சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன்!

சமீபத்தில் மகேஷ்பாபு ராஜமௌலியுடன் தனது புதிய திட்டம் பற்றி பேசி இருந்தார். அவருடன் பணியாற்றுவது ஒரு கனவு நனவாவது போல என்று கூறிய மகேஷ் பாபு, ஒரே நேரத்தில் 25 படங்களை எடுப்பது போன்றது அது உடல் ரீதியான கடினமாக இருக்கும் மேலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் இது ஒரு பான் இந்தியா படமாக இருக்கும். பல தடைகளை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு எங்கள் வேலைகளை எடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார் மகேஷ்பாபு.

Follow Us:
Download App:
  • android
  • ios