10 ஆண்டுகளை நிறைவு செய்த..சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன்!
சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான, எஸ்.ஆர்.பிரபாகரன் வெற்றிகரமாக திரையுகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான, எஸ்.ஆர்.பிரபாகரன் வெற்றிகரமாக திரையுகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமாகனவர் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாரட்டு பெற்றவர்.
மேலும் செய்திகள்: பத்ரிநாத் - கேதார்நாத் கோவில்களுக்கு விசிட் அடித்த அஜித்! மனம் உருக வேண்டிக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தற்போது தனது சொந்த தயாரிப்பில், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘ரெக்கை முளைத்தேன்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக ‘கொலைகார கைரேகைகள்’ எனும் வெப் தொடரையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழ் நாடு அரசின் விருதை வென்றுள்ளார். தற்போது திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
மேலும் செய்திகள்: சால்ட் அண்ட் பெப்பர் தாடியில்.. செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட்டில் போஸ் கொடுத்த சிம்பு! இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
இது குறித்து இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் கூறுகையில்… திரையுலகில் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக கடப்பது மிகப்பெரியது. இயக்குநராக 10 ஆண்டுகள் திரைப்பயணம் உங்களால் தான் சாத்தியமானது. நான் அறிமுகமான காலத்திலிருந்து எனக்கு முழு ஆதரவையும் அன்பையும் தந்துள்ளீர்கள். பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தரும் கருத்துக்களும் ஆதரவும் தான் என்னை வளர்த்தெடுத்துள்ளது. என்னை இயக்குநராக உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்கள் நீங்கள். உங்கள் அனைவருக்கும் பெரு நன்றி. இந்நேரத்தில் எனது படைப்புகளுக்கு பெரும் ஆதரவை தந்த ரசிகப்பெருமக்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ரசிக்கும்படியான உங்களுக்கு பிடித்தமான படைப்புகளை தொடர்ந்து உருவாக்குவேன் என்று கூறியுள்ள இவர், சுந்தர பாண்டியன் படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கும் அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை இதோ...