54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா..! ஏன்... முதல் முறையாக போட்டுடைத்த உண்மை!
பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜெ.சூர்யா 54 வயதாகியும் ஏன், திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து முதல் முறையாக கூறியுள்ளார்.
துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராக மாறியவர், எஸ்.ஜே.சூர்யா... உதவி இயக்குனராக இருக்கும் போது அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, வருடம் வாலி படத்தின் கதையை கூற, கதையை கேட்டதுமே ஓகே சொல்லி ஷூட்டிங்கை துவங்க சொன்னார் அஜித். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே, முதல் படத்திலேயே தமிழ் திரையுலகின், ஒட்டு மொத்த இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்து, அடுத்த படத்திலேயே விஜயை ஹீரோவாக நடிக்க வைத்தார்.
விஜய் - ஜோதிகாவை வைத்து, இவர் இயக்கிய 'குஷி' படம், தற்போது வரை ரசிகர்களால் ரசித்து பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் முதல், கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடல் வரை, அனைத்துமே... தளபதி ரசிகர்களின் ஃபேவரட்.
மேலும் செய்திகள்: 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக சிம்பு செய்த செயல்..! கண் கலங்கிய டி.ராஜேந்தர் ..!
இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த பின்னர், மூன்றாவது படமான நியூ படத்தை தானே இயக்கிய அதில் ஹீரோவாகவும் நடித்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு, சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இந்த படம், சில சர்ச்சைகளை சந்தித்தாலும், ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கி நடித்த படங்கள், தொடர் தோல்வியை தழுவியதால் சில காலம் திரையுலகில் அதிகம் தலை காட்டாமல் இருந்த எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
54 வயதாகும் இவருக்கு சமீபத்தில் இவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முயற்சித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில், இதற்க்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா திருமணம் செய்து கொள்ளும், எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தவே விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்: Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
இதை தொடர்ந்து ஏன்? முரட்டு சிங்கிளாக இருக்கிறேன் என்பது குறித்து... முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "சினிமாவில் நான் நிறைய ரிக்ஸ் எடுத்துள்ளேன். அதனால் நான் இயக்கிய நியூ படத்தில் நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன். அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால் என் நிலைமை மோசமாகியிருக்கும். அப்படி மோசமாகியிருந்தால் அது என்னுடன் போயிருக்கும். ஒரு வேளை எனக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பாதித்திருக்கும் என உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?