Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
ராஷ்மிகாவின் சாமி பாடலுக்கு கியூட்டாக ஆட்டம் போட்ட, குட்டி பாப்பாவை பார்க்க வேண்டும் என, ராஷ்மிகா வீடியோ வெளியிட்டு போட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ராஷ்மிகாவின் சாமி பாடலுக்கு கியூட்டாக ஆட்டம் போட்ட, குட்டி பாப்பாவை பார்க்க வேண்டும் என, ராஷ்மிகா வீடியோ வெளியிட்டு போட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலும் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
மேலும் செய்திகள்: ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?
எனினும் முதல் பாகத்தின் தாக்கத்தில் இருந்து, இதுவரை ரசிகர்கள் யாரும் வெளியே வரவில்லை. காரணம் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் வேறு லெவலுக்கு ரசிகிர் மத்தியில் ரீச் ஆனது. அந்த வகையில், 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.
மேலும் செய்திகள்: ‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்
அதுபோன்ற ஒரு டான்ஸ் வீடியோவை தான் வெளியிட்டு உருகியுள்ளார் ராஷ்மிகா. சாமி பட பாடலுக்கு பல குட்டீஸ் ஆட்டம் போட, ஒரு குழந்தை மட்டும் கிட்ட தட்ட ரஷ்மிகா போலவே டான்ஸ் ஆடியுள்ளார். இவரது இந்த கியூட் டான்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, இது ராஷ்மிகா கண்களிலும் பட்டுள்ளது, இதனை பார்த்து இந்த குழந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்றும், ஆனால் அது எப்படி என கேள்வியோடு இந்த வீடியோவை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ படு வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: 57 வருஷத்துக்கு முன் Fail ஆகிட்டேன்.. இப்போ மிஸ் ஆகாது- 73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் ரசிகர்கள் குறை என்று சொன்னவற்றை எல்லாம், நிறையாக மாற்றி, இப்படத்தை சூப்பர் ஹிட்டாக மாற்ற படக்குழு தீவிரமாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.