‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்
varisu : வாரிசு திரைப்படத்தின் 100-வது நாள் ஷூட்டிங் இன்று என்பதால் அதனை கொண்டாடும் விதமாக நடிகை ராஷ்மிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தான் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், யோகிபாபு, ஷியாம், குஷ்பு, சங்கீதா, பிரபு, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரவீன் கே.எல். மேற்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னுடைய இன்னொரு அம்மா... மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன எமோஷனல் வாழ்த்து
வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், அப்படத்தின் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.180 கோடி வசூலித்துள்ளதால், வியாபார ரீதியாகவும் வேறலெவலில் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் 100-வது நாள் ஷூட்டிங் இன்று என்பதால் அதனை கொண்டாடும் விதமாக நடிகை ராஷ்மிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசே ஆகாதா, 48 வயதிலும் 28 வயசு இளைஞன் போல இளமையாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?