பத்ரிநாத் - கேதார்நாத் கோவில்களுக்கு விசிட் அடித்த அஜித்! மனம் உருக வேண்டிக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தற்போது பைக் ரைடிங் செய்துள்ள அஜித், சமீபத்தில் புத்தர் கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வழியான நிலையில், தற்போது கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும், AK 61-ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய பைக் ரைடிங் கேங்குடன் சேர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் தான், தன்னுடைய நடித்து வரும் மஞ்சு வாரியருடன் லடாக் பகுதியில் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலானது. இதை தொடர்ந்து நேற்றைய தினம், புத்தர் கோவிலுக்கு அஜித் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் இது குறித்த வீடியோக்கள் சில வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகள்: சால்ட் அண்ட் பெப்பர் தாடியில்.. செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட்டில் போஸ் கொடுத்த சிம்பு! இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
இதை தொடர்ந்து தற்போது அஜித், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு சென்றுள்ளார். அப்போது மனம் உருக, அவர் சுவாமி தரிசனம் செய்து நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை கையில் பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும், தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பிய ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அஜித்தின் தற்போதைய புகைப்படங்கள் தாறுமாறாக சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா..! ஏன்... முதல் முறையாக போட்டுடைத்த உண்மை!