சென்னையில் பயங்கரம்! ஒரே நேரத்தில் சீரிய 3 குண்டுகள்! சிதறிய மூளை! ரத்த வெள்ளத்தில் விமானப்படை வீரர் பலி.!

சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குஜராத் மாநிலம், கொடினூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோ பாய் சவுகான் (22) விமானப்படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

Chennai avadi training center...airman commits suicide

சென்னையில் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குஜராத் மாநிலம், கொடினூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோ பாய் சவுகான் (22) விமானப்படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தின் மெயின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 

இதையும் படிங்க;- சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் பயங்கர மோதல்.. கண்ணாடி சிதறி வெளியே விழுந்த பெண்.. பகீர் சிசிடிவி காட்சிகள்.!

Chennai avadi training center...airman commits suicide

அப்போது அவரிடம் இருந்த 'இன்சாஸ்' வகை துப்பாக்கியால் வலது பக்க தொண்டை பகுதியில் வைத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அதில், அவர் வைத்திருந்த துப்பாக்கியில் 20 குண்டுகள் இருந்துள்ளது. ஒருமுறை அழுத்தினால் 3 குண்டுகள் வெளிவரக்கூடிய பட்டனை அவர் அழுத்தியதால் ஒரே நேரத்தில் 3 குண்டுகள் அவரது தொண்டையை துளைத்து கொண்டு மண்டை வழியே வெளியேறியதில் மூளைச்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Chennai avadi training center...airman commits suicide

இந்த துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சிடைந்த சக வீரர்கள் வந்து பார்த்த போது நீரோ பாய் சவுகான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆவடி முத்தா பேட்டை காவல்துறையினர், இவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானப்படை வீரர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  கட்டிய தாலியின் ஈரம் கூட காயலையே.. என்ன விட்டு போயிட்டியே மாமா.. நெஞ்சில் அடித்து கதறிய இளம்பெண்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios