சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் பயங்கர மோதல்.. கண்ணாடி சிதறி வெளியே விழுந்த பெண்.. பகீர் சிசிடிவி காட்சிகள்.!

கன்னியாகுமரியில் அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இது தொடர்பாக பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

School bus collides with tourist van.. CCTV Footage Released

கன்னியாகுமரியில் அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இது தொடர்பாக பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

மகாராஷ்டிராவிலிருந்து  18 பேர்  கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் சுற்றுலாப்பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரியிலிருந்து  தனியாருக்கு சொந்தமான வேன் வாடகைக்கு எடுத்து சுசீந்திரம் புறப்பட்டனர். 

இதையும் படிங்க;- காதல் திருமணம் செய்த மூன்று நாட்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடித்த கணவர்..!

School bus collides with tourist van.. CCTV Footage Released

 அப்போது  கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவாமிநாதபுரத்தில் வந்த போது கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் மாணவ மாணவிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு பள்ளிக்கு அதிவேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதமாக பள்ளி வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் இரண்டு வேன்களின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. 

இதில் சுற்றுலா வேனில் வந்த 7 பேர் படுகாயங்களுக்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுதத்து, படுகாயடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விபத்திற்கான  சிசிடிவி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க;-  அரசு பள்ளி மாணவிகள் குரூப்பாக உட்கார்ந்து கொண்டு சரக்கு அடிக்கும் காட்சி வைரல்.. சைடிஸ்க்கு ஊருக்காய்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios