அரசு பள்ளி மாணவிகள் குரூப்பாக உட்கார்ந்து கொண்டு சரக்கு அடிக்கும் காட்சி வைரல்.. சைடிஸ்க்கு ஊருக்காய்..!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மொட்டை மாடியில் கும்பலாக உட்கார்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் சரக்கு அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்கணும்னா.. டாஸ்மாக் கடையை மூடுவதே ஒரே வழி.. அன்புமணி..!
இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் இல்லையேன்றால் மாணவர்களின் சீரழிவிற்கு அரசே காரணமாகி விடும் என அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் தொண்டை தண்ணீர் வற்ற கூக்குரலிட்டு வருகின்றனர். அதேபோல், நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணையின் போது சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவிகள் கும்பலாக உட்கார்ந்து சரக்கு அடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், மொட்டை மாடி ஒன்றில் 5க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் பள்ளி சீருடையில் கும்பலாக உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பாட்டிலில் சரக்கை மிக்சிங் செய்து குடித்து விட்டு சைடிஸ்சாக ஊர்காரை தொட்டு கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த மாணவிகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதையும் படிங்க;- ஸ்கூல் யூனிபார்மில் மரத்தடியில் கஞ்சா அடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்.. வெளியான வீடியோவால் பரபரப்பு..!