ஸ்கூல் யூனிபார்மில் மரத்தடியில் கஞ்சா அடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்.. வெளியான வீடியோவால் பரபரப்பு..!
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடி ஒன்றில் வைத்து கஞ்சாவை எடுத்து பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- காதல் திருமணம் செய்த மூன்று நாட்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடித்த கணவர்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், இதனால், பலர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், செங்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் மரத்தடி ஒன்றில் வைத்து கஞ்சா அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர், மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா அததிக அளவு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது.. இதுக்கு ஒரு முடிவு கட்டலனா மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும்-நீதிபதி