காதல் திருமணம் செய்த மூன்று நாட்களில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடித்த கணவர்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மகள் கவுசல்யா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்திக் (25) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 7-ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

Young woman commits suicide three days after love marriage

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மகள் கவுசல்யா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்திக் (25) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 7-ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் காத்திருந்த மணம்பெண்.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.!

Young woman commits suicide three days after love marriage

இந்நிலையில், கார்த்திக் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கவுசல்யா மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் கார்த்திக் உடனடியாக கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Young woman commits suicide three days after love marriage

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவுசல்யா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 2 நாட்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios