MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இந்த தேர்தலோடு அதிமுக காலி.! தேர்தலில் மாஸ் காட்டப்போகும் விஜய்.! ஜோதிமணி கருத்தால் திமுக அதிர்ச்சி!

இந்த தேர்தலோடு அதிமுக காலி.! தேர்தலில் மாஸ் காட்டப்போகும் விஜய்.! ஜோதிமணி கருத்தால் திமுக அதிர்ச்சி!

Jothimani: ஆளுநரை அறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றம் செய்து விட்டார்கள். மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 07 2026, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக காங்கிரஸ் கூட்டணி
Image Credit : Google

திமுக-காங்கிரஸ் கூட்டணி

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகே உறுதியானது. காங்கிரஸ் கட்சியில் கிரீஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்கள். இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் விஜய்க்கு இளைஞர்களிடம் ஆதரவு அதிகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்
Image Credit : Asianet News

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்

கரூரில் உள்ள தனியார் அரங்கில் "கனவு மெய்ப்படும்" என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது.

Related Articles

Related image1
இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட பள்ளிக்கல்வித்துறை!
Related image2
உலகிலேயே புதிய கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை போட்ட ஒரே கம்பெனி திமுக தான்! காரணங்கள் என்னென்ன? அன்புமணி பகீர்
34
அதிமுக - பாஜக கூட்டணி
Image Credit : Asianet News

அதிமுக - பாஜக கூட்டணி

ஆளுநர் மாளிகையை பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார். ஆளுநரை அறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றம் செய்து விட்டார்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலைப்பட தேவையில்லை. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவார். பாஜக தமிழகத்தில் வெற்றி பெற மாட்டார்கள் என்று முடிவு செய்து விட்டார்கள். இந்தியா கூட்டணி மிக நிச்சயமாக வெற்றி பெறும் அதிமுக - பாஜக கூட்டணி இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு செல்வார்கள்.

44
 அதிமுகவுக்கு கடைசி தேர்தல்
Image Credit : X

அதிமுகவுக்கு கடைசி தேர்தல்

நிதிஷ்குமார் பதவி விலகல் செய்துள்ளார். அந்த மாநிலத்தில் கூட்டணி கட்சியை பாஜக கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் அதிமுக என்ற கட்சி செய்யக்கூடிய கடைசி தேர்தலாக இது இருக்கும். இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக்கூடிய விஜய் நிச்சயமாக இரண்டாவது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என ஜோதிமணி கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
அரசியல்
திமுக
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு
Recommended image3
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Related Stories
Recommended image1
இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட பள்ளிக்கல்வித்துறை!
Recommended image2
உலகிலேயே புதிய கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை போட்ட ஒரே கம்பெனி திமுக தான்! காரணங்கள் என்னென்ன? அன்புமணி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved