MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட பள்ளிக்கல்வித்துறை!

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட பள்ளிக்கல்வித்துறை!

தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை .

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 06 2026, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தனியார் பள்ளிகள்
Image Credit : Google

தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

25
மதம் சார்ந்த நிகழ்வுகள்
Image Credit : our own

மதம் சார்ந்த நிகழ்வுகள்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்.. லேட்டஸ்ட் அப்டேட்!
Related image2
அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை.. இன்று முதல். போக்குவரத்து வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
35
பள்ளிக்கல்வித்துறை
Image Credit : our own

பள்ளிக்கல்வித்துறை

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில்: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன்பின்னரோ எந்தவொரு நிகழ்ச்சியோ, கூட்டமோ, பிரசாரம் மற்றும் அறிவுரைகள் வழங்கலோ, அல்லது எந்தவொரு வெளிநபரோ, சங்கமோ அல்லது அமைப்பின் எந்த ஒரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்யவும் அல்லது நடத்தவும் கூடாது.

45
முன் அனுமதி பெற வேண்டும்
Image Credit : Google

முன் அனுமதி பெற வேண்டும்

அதேபோல், பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம் ஆகியவற்றை நடத்த பயன்படுத்தக் கூடாது. கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள் போன்ற செயல்பாடுகள், அவை மதம், அரசியல் சாராமல், பள்ளியின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், இதுசார்ந்து அரசால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

55
மாணவர்கள் இடையே ஒற்றுமை
Image Credit : our own

மாணவர்கள் இடையே ஒற்றுமை

இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்த அடிப்படையில் மாணவர்கள் இடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும், நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிப்பதாக இருக்கும். எனவே இவற்றை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
பள்ளிகள்
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை.. இன்று முதல். போக்குவரத்து வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Recommended image2
நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்.. லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image3
5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
Related Stories
Recommended image1
நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்.. லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை.. இன்று முதல். போக்குவரத்து வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved