MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை.. பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500? புதிய அப்டேட் இதோ!

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை.. பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500? புதிய அப்டேட் இதோ!

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையாக பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.2,500 ஏறும் என தகவலகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக தவெக அரசு அறிவித்துள்ள அப்டேட் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 15 2026, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : AI

மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு பெண்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் மாதந்தோறும் 1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிதாக ஆட்சிக்கு வந்த விஜய்யின் தவெக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்குப் பதிலாக, தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' மூலம் மாதம் ரூ.2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500?
Image Credit : Asianet News

பெண்கள் அக்கவுண்ட்டில் இன்று ஏறும் ரூ.2,500?

கடந்த மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது அமலுக்கு வரும் என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் திட்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமான ரூ.1,000 மட்டுமே பெண்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், "ஜூன் 15ஆம் தேதியான இன்று முதல் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படும்" என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?

ஆனால், அரசு வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. முறைப்படியான அரசாணையோ அல்லது முழுமையான பட்ஜெட் அறிவிப்போ இல்லாமல் தொகையை உடனடியாக உயர்த்த முடியாது என்பதால், வழக்கமான நடைமுறைப்படி இன்று (ஜூன் 15) பயனாளிகளின் கணக்கில் ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Related image1
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Related image2
Rs 1000 Scheme : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பதிவு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே
34
புதிய அப்டேட் இதுதான்
Image Credit : Asianet News

புதிய அப்டேட் இதுதான்

தமிழகத்தில் தற்போது சுமார் 1.3 கோடி பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். மாதம் ரூ.1,000 வழங்கவே ஆண்டுக்கு சுமார் ரூ.15,600 கோடி தேவைப்படும் நிலையில், அதை ரூ.2,500 ஆக உயர்த்தினால் ஆண்டுக்கு ரூ.39,000 கோடிக்கு மேல் நிதி தேவைப்படும். மாநிலத்தின் தற்போதைய கடன் சுமையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை தொய்வில்லாமல் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் நிதிநிலை குறித்த 'வெள்ளை அறிக்கை' தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

44
தவெக அரசின் பிளான் என்ன?
Image Credit : Asianet News

தவெக அரசின் பிளான் என்ன?

தவெக-வின் தேர்தல் அறிக்கையின்படி, 60 வயதுக்குட்பட்ட தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தற்போதுள்ள பயனாளிகளில் சுமார் 15% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், அவர்களை முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (OAP) கீழ் மாற்றும் பணிகளும், போலி குடும்ப அட்டைகளை முறைப்படுத்தும் பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

எனவே, 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' மூலம் ரூ.2,500 உயர்வு கிடைப்பது உறுதி என்றாலும், அதற்கான தகுதிப் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சமூக வலைத்தள வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு
டிவி.கே. விஜய்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
"உதயநிதிக்கு அம்பேத்கர் பற்றி 4 வரி பேச வருமா? ஒரே மேடையில் ஏற தயாரா?" - ஆதவ் அர்ஜுனா அதிரடி 🔥
Recommended image2
Now Playing
"விசில் சின்னம் மட்டும் இருந்திருந்தா.." EPS-ஐ வறுத்தெடுத்த செங்கோட்டையன்!
Recommended image3
Now Playing
"பொறாமையால தான் எதிர்கட்சிகள் குறை சொல்றாங்க!" - த.வெ.க அரசுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் அதிரடி..
Related Stories
Recommended image1
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
Rs 1000 Scheme : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பதிவு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved