MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்.. லேட்டஸ்ட் அப்டேட்!

நேற்று எந்தெந்த மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்.. லேட்டஸ்ட் அப்டேட்!

தெற்கு உள் கர்நாடகா முதல் தெலங்கானா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 06 2026, 06:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் வெயில்
Image Credit : our own

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாத நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலால் நொந்து நூலாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மழை எப்போது பெய்யும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.

25
எந்தெந்த மாவட்டங்களில் 100 டிகிரி வெயில்
Image Credit : Asianet News

எந்தெந்த மாவட்டங்களில் 100 டிகிரி வெயில்

நேற்று ஈரோடு, கரூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதேபோல் திருத்தணி, மதுரை, சென்னை பகுதிகளில் 100 டிகிரி வெயில் பதிவானது. பிற பகுதிகளில் இயல்லை ஒட்டியும் ஒரு சில இடங்களில் 98 டிகிரியாகவும் இருந்தது. வெப்பநிலையை பொருத்தவரையில் திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை குறித்து முக்கிய தகவல் ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

Related Articles

Related image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Related image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
35
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
Image Credit : Asianet News

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்

அதாவது தெற்கு உள் கர்நாடகா முதல் தெலங்கானா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 8ம் தேதி தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
தமிழக கடலோர மாவட்டங்களில் மழை
Image Credit : Asianet News

தமிழக கடலோர மாவட்டங்களில் மழை

மேலும் மார்ச் 9ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

55
சென்னை நிலவரம்?
Image Credit : our own

சென்னை நிலவரம்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேலம்
வெப்ப அலை
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
Recommended image2
Now Playing
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
Recommended image3
ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!
Related Stories
Recommended image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Recommended image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved