- Home
- Tamil Nadu News
- பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Tomato Onion Price: கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாகவும் லாரிகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் மலைப்போல் குவிந்து வருகிறது.

சமையலுக்கு ருசியை கொடுக்கும் வெங்காயம், தக்காளி
சமையலுக்கு ருசியை அள்ளிக்கொடுப்பது காய்கறிகளை விட தக்காளி, வெங்காயம் தான். காய்கறி சந்தைகளில் மக்கள் எதை வாங்குகிறார்களோ இல்லையோ முக்கியமாக தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்வார்கள். ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை இந்த இரண்டின் தேவையும் மிக அதிகம். எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை சரிந்திருந்தால் போதும் கூடை, கூடையாக வாங்கி செல்வார்கள்.
போட்டி போடும் வெங்காயம், தக்காளி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் மலைப்போல் குவிந்து வருகிறது. அதேபோல் லாரிகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு குறைந்து வருகிறது. தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம், தக்காளி ரூ.100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் சந்தோஷத்தில் உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தை நிலவரம்
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் நிலவரத்தை இங்கே பார்க்கலாம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 230 முதல் 290 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மாங்காய் முதல் கோவைக்காய் வரை
பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.55 முதல் 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், பூசணி ஒரு 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 முதல் 27 ரூபாய்க்கும், கோவைக்காய் 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை
அதேபோல் பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், காலிஃபிளவர் 25 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

