Asianet News TamilAsianet News Tamil

நீட் முதுகலை கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமானவை.. விவரம் இங்கே..

நீட் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான ( NEET PG Counselling 2022) கலந்தாய்வு முதல் சுற்று இன்று தொடங்கியது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in-ல் பதிவு செய்துக் கொள்ளலாம். தற்காலிக அட்டவணைப்படி, முதல் சுற்றுகள் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். 
 
NEET PG Counselling 2022 Round 1 registration to begin today at http://mcc.nic.in, know how to apply
Author
First Published Sep 15, 2022, 1:12 PM IST

நீட் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான ( NEET PG Counselling 2022) கலந்தாய்வு முதல் சுற்று இன்று தொடங்கியது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in-ல் பதிவு செய்துக் கொள்ளலாம். தற்காலிக அட்டவணைப்படி, முதல் சுற்றுகள் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். 

மேலும் படிக்க:இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு… அறிவித்தது மத்திய சுகாதாரத் துறை!!

செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மருத்துவ இடங்களை நிரப்புதல் மற்றும் தேர்வு செய்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். பின்பு, மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு முடிவுகள் செப்.28 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டில் ஏதேனும் ஆட்சபனைகள் இருப்பின் செப்.29 ஆம் தேதி முதல் அக்.4 ஆம் தேதி வரை தெரிவித்துக் கொள்ளலாம்.

இதில் 50% அகில இந்திய மருத்துவ இடங்களும், 50% மாநில இடங்களும் உள்ளன.  இந்தாண்டு முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது. காத்திருப்பு பட்டியல் மற்றும் தவறான் காலியிட சுற்றும் ஆகியவையும் அடங்கும். 2022 ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

மேலும் படிக்க:எஸ்சி, எஸ்டி, முஸ்லிம்களுக்கு ஊதியம், வேலைவாய்ப்பில் கடும் பாகுபாடு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் அதிர்ச்சி

Follow Us:
Download App:
  • android
  • ios