oxfam:எஸ்சி, எஸ்டி, முஸ்லிம்களுக்கு ஊதியம், வேலைவாய்ப்பில் கடும் பாகுபாடு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் அதிர்ச்சி
பட்டியலினத்தவர்கள்(எஸ்சி), பழங்குடியினர்(எஸ்டி), மற்றும் முஸ்லிகளுக்கு ஊதியம் தருவதிலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் பெரும்பாகுபாடு இருந்து வருகிறது என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தவர்கள்(எஸ்சி), பழங்குடியினர்(எஸ்டி), மற்றும் முஸ்லிகளுக்கு ஊதியம் தருவதிலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் பெரும்பாகுபாடு இருந்து வருகிறது என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பைச் சார்ந்தவர்களைவிட, இந்த வகுப்பைச் சாராதவர்கள் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் அதிகமாக இருக்கிறது. அதேபோல முஸ்லிம்களின் சராசரி மாத வருமானத்தைவிட, முஸ்லிம் அல்லாதவர்களின் வருமானம் ரூ.7ஆயிரம் அதிகமாக இருக்கிறது
இந்தியாவில் பாகுபாடு 2022 என்ற தலைப்பில் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, முஸ்லிம்களுக்கு சமூகத்தில் எவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, வாழ்வாதாரம், ஊதியம், வேளாண் தொழில் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லக்கம்பூர் கெரியில் சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தல்; உ.பி. அரசை விளாசிய பிரியங்கா காந்தி
இதில் 2019-20ம் ஆண்டு கணக்கின்படி, நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 15.6% பேர் 15 வயது அல்லது அதற்குமலே் வரும்போது சாரசரி வருமானமுள்ள வேலைக்கு செல்கிறார்கள். இதில் முஸ்லிம்அல்லாதவர்கள் 23.3சதவீதம் பேர் வேலையில் உள்ளனர்.
நகர்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 68 சதவீதம் பேர் பாகுபாட்டால் வேலைகிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 2019-20ம் ஆண்டின்படி முஸ்லிம்கள், முஸ்லிம்அல்லாதவர்களிடையே மாதவருமான வேலைவாய்ப்பில் 70 சதவீதம் பாகுபாடு இருக்கிறது
சுயதொழில்செய்யும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர், பிறவகுப்பினரைவிட மாதம் ரூ.5ஆயிரம் குறைவாகவே ஊதியம் ஈட்டுகிறார்கள். இருதரப்பினரிடையே இடைவெளி 41% இருக்கிறது.
உ.பி. லக்கிம்பூர் கெரியில் தலித் சகோதரிகள் பலாத்காரக் கொலை: 6 பேர் கைது
கிராமப்புறங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கும், பிற வகுப்பினருக்கும் வழக்கமான வேலை வழங்குவதில் அதிகமான பாகுபாடு நிலவுகிறது. 2018-19ம் ஆண்டை விட கிராமப்புறங்களில் எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கும் பிறவகுப்பினருக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கும் 10 சதவீதம் இடைவெளி அதிகரித்து 79சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் முதல் கால்பகுதியில் முஸ்லிகளிடையே வேலையின்மை அதிகமாக அதிகரித்து 17சதவீதமாக உயர்ந்தது.
கொரோனா காலத்தில், மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களில் முஸ்லிம்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் 11.8சதவீதத்திலிருந்து 40.9சதவீதமாக உயர்ந்தது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் 5.6 சதவீதமாக இருந்தது 28.3 சதவீதமாக அதிகரித்தது. இது பொதுப்பிரிவினரிடையே 5.4 சதவீதத்திலிருந்து 28.1 சதவீதமாக உயர்ந்தது
கிராமப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் வருமானம் அதிகபட்சமாக 13% குறைந்தது, பிற மதத்தினருக்கு அதிகபட்சமாக 9% குறைந்தது. கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பு பெற்ற முஸ்லிம்களுக்கு மாத ஊதியம், 18% குறைந்தது,எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 10சதவீதம அளவு வருமானம் குறைந்தது.
ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
வரலாற்று ரீதியாகவே தலித்துகள், ஆதிவாசிகள், மதரீதியானசிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், வேளாண்மை ஆகியவற்றில் பாகுபாட்டைச் சந்தித்து வருகிறார்கள்.
நகர்ப்புறங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த சராசரி தொழிலாளியின் மாத வருமானம் ரூ.15,312 ஆக இருக்கும்போது, பிற வகுப்பைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் வருமானம் ரூ.20,346ஆக இருக்கிறது. இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினரைவிட பொதுப்பிரிவினர் 33 சதவீதம் கூடுதலாக ஊதியம் பெறுகிறார்கள்.
சுயதொழில் செய்பவர்களில் பிறவகுப்பினர் மாத வருமானம் ரூ.15,878ஆக இருக்கும்போது, எஸ்சி,எஸ்டி வகுப்பினரின் வருமானம் ரூ10,533 ஆக இருக்கிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை மாதஊதியம் பெறும் வேலை பெறுவதிலும், சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதிலும் பிற மதத்தினரோடு ஒப்பிடும்போது, பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
நகர்புறங்களில் முஸ்லிம்களின் வேலையின்மை 68.3 சதவீதாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக பாகுபாடு கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் முஸ்லிம்கள் சந்திக்கும் பாகுபாடு 9சதவீதம் அதிகரித்துள்ளது. 2004-05ல் 59.3 சதவீதமாக இருந்தது.
தமிழுக்கு போட்டி இந்தி மொழி அல்ல: பிராந்திய மொழிகளுக்கு நட்பு: அமித் ஷா பேச்சு
மாதம் ஊதியம் பெறும் முஸ்லிம்கள் சராசரி ஊதியம் ரூ.13,672 ஆக இருக்கும்போது, பிறமதத்தினர் சராசரி ஊதியம் அவர்களைவிட 1.5 மடங்கு அதிகமாகரூ.20,346 ஆக இருக்கிறது.அதாவது முஸ்லிம்கள் அல்லாதோர் 49சதவீதம் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள்.
சுயதொழில் செய்யும் முஸ்லிம் அல்லாதோர் சாரசரியாக ரூ.15,878 சம்பாதிக்கிறார்கள், ஆனால், சுயதொழில் செய்யும் முஸ்லிம் மாதத்துக்கு ரூ.11,421 மட்டுமே ஊதியம்ஈட்டுகிறார்.
இவ்வாரு ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது