Lakhimpur Kheri : லக்கிம்பூர் கெரியில் 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தல்; உ.பி. அரசை விளாசிய பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நிகாசென் கிராமத்தில் தலித் சகோதரிகள்இருவர் தூக்கில் தொங்கிய சம்பவத்தில் உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நிகாசென் கிராமத்தில் தலித் சகோதரிகள்இருவர் தூக்கில் தொங்கிய சம்பவத்தில் உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிகாசன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் தலித் சகோதரிகள் இருவர் கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த கரும்பு தோட்டடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அவர்கள் வீடு அமைந்துள்ளது.
உ.பி. லக்கிம்பூர் கெரியில் தலித் சகோதரிகள் பலாத்காரக் கொலை: 6 பேர் கைது
இந்த இரு சகோதரிகளையும் 6 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தசிறுமிகளின் தாயும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சிறுமிகள் கொலை தொடர்பாக 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, போக்ஸோ, பலாத்காரம், அத்துமீறல், கொலை ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்தை ஹத்ராஸ் சம்பவத்தோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நிகாசன் காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் இரு தலித் சகோதரிகள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
எல்லாத்தையும் வாங்கி,வாக்காளர்களை மொத்த வியாபாரி கிண்டல் செய்வார் அப்போ பாருங்க!ப.சிதம்பரம் தாக்கு
போலீஸார் குறித்து அந்த சகோதரிகளின் தந்தை தீவிரமான குற்றச்சாட்டு கூறுகிறார், அவரின் அனுமதியில்லாமல் சகோதரிகளுக்கு உடற்கூறு ஆய்வு நடந்துள்ளது. லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொலையும், ஹத்ராஸில் தலித் மகள்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் இரு சகோதரிகள் கொல்லப்பட்டது மனதை பிசைகிறது. பட்டப்பகலில் இருசிறுமிகளும் கடத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
உ.பியில் சட்டம் ஒழுங்கு மேம்பாடாதபோது, நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரம் கொடுக்கப்படுகின்றன. உ.பியில் ஏன் பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடப்பது அதிகரிக்கிறது.எப்போது அரசு விழத்துக்கொள்ளும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- Lakhimpur Kheri Dalit girls' murder
- Lakhimpur Kheri crime news
- Lakhimpur Kheri dalit death
- Lakhimpur Kheri dalit sisters death
- Lakhimpur Kheri dalit sisters killed
- Minor Dalit Sisters death in UP
- Two minor Dalit sisters death
- U.P.s Lakhimpur Kheri case
- Uttar Pradesh Dalit Sisters' Death
- dalit
- dalit sisters death in Lakhimpur Kheri
- lakhimpur case
- lakhimpur kheri case
- lakhimpur news
- lakhimpur kheri news today