ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் சிறுவன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஆசிரியை ஒருவரை மாணவர் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

little boy hugging and apologising to teacher video gone viral

ஆசிரியை ஒருவரை மாணவர் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் யார் என்பது தெரியவந்துள்ளது. வீடியோவில் உள்ள பெண் விஷாகா திரிபாதி மற்றும் அவர் நைனியில் உள்ள சேத் ஆனந்த்ராம் ஜெய்ப்ரியா பள்ளியில் ஆசிரியராக உள்ளார். வீடியோவில் இருக்கும் சிறுவன் அவரது மாணவன் அதர்வ். இவர் வகுப்பில் சத்தம் போட்டு அடங்காமல் இருந்துள்ளார். அதற்காக அந்த மாணவரிடம் பேச மாட்டேன் என்று அந்த ஆசிரியர் கூறியதை அடுத்து அதர்வ் அவரிடம் மன்னிப்பு கேட்டும் ஆசிரியர் அவரை மன்னிக்கவில்லை.

இதையும் படிங்க: பரபரப்பு !! மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் யானை.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை.. பாலக்காடு அருகே சோகம்

இதை அடுத்து அந்த மாணவர் ஆசிரியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இனி இவ்வாறு செய்ய மாட்டேன். மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். இந்த சம்பவத்தை ஆசிரியரைன் தோழியான நிஷா வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்து பேசிய ஆசிரியர் விஷாகா, ஆசிரியர்கள் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து பெற்றோருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

இதையும் படிங்க: தமிழுக்கு போட்டி இந்தி மொழி அல்ல: பிராந்திய மொழிகளுக்கு நட்பு: அமித் ஷா பேச்சு

மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் வெளியிடுவார்கள். அவ்வாறு தான் நான் மாணவரிடம் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. நான் வீடியோவைப் பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். அங்கிருந்து அது வைரலானது என்று தெரிவித்தார். இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் சிறுவனின் அழகான செயல்கள் காண்பவரை கவர்ந்துள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaj Tak (@aajtak)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios