பரபரப்பு !! மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் யானை.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை.. பாலக்காடு அருகே சோகம்
கேரள மாநிலம் பாலக்காடு முண்டூர் அருகே அச்சம்பள்ளி என்னும் பகுதியில் இன்று காட்டு பன்றிக்காக தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு முண்டூர் அருகே அச்சம்பள்ளி என்னும் பகுதியில் இன்று காட்டு பன்றிக்காக தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாலக்காடு வனத்துறையினர், விசாரணை நடத்தினர். பெண்யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க:நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொடர்ந்து யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் தான் ஆற்றில் மீன் பிடிக்க சென்றக்கொண்டிருந்த இரண்டு போலீசாரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:rahul gandhi yatra:சீனாவுக்கு சிரமமில்லாமல் இந்தியப் பகுதியை தாரை வார்த்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி விளாசல்