rahul gandhi yatra:சீனாவுக்கு சிரமமில்லாமல் இந்தியப் பகுதியை தாரை வார்த்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி விளாசல்
இந்தியாவின் எல்லைப்பகுதியில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளழை எந்தவிதமான சண்டையும் இன்றி, சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்துள்ளார். இழந்த இந்தப் பகுதிகளை மத்திய அரசு எவ்வாறு மீட்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் எல்லைப்பகுதியில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளழை எந்தவிதமான சண்டையும் இன்றி, சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்துள்ளார். இழந்த இந்தப் பகுதிகளை மத்திய அரசு எவ்வாறு மீட்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கல்வான் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவமும் எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்தன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக லடாக் எல்லையில் பதற்றமானசூழல் நிலவி வந்தது.
குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் படகு, ரூ.200 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது
இந்நிலையில் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இருநாட்டு ராணுவ கமாண்டர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை நடந்தது. 16 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை வாபஸ் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு நாட்டு ராணுவத்தினரும் வாபஸ் பெறும் நடவடிக்கை தொடங்கியது. இரு நாட்டு படைகளும் எல்லையில் இருந்து திரும்பப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அகற்றம்! விப்ரோ, பிரஸ்டீஜ், ஐடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறலையும் அதைக் கண்டிக்காக பிரதமர் மோடி குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2020, ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலையில்தான் எல்லைப்பகுதி தொடர வேண்டும் என்று இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது.
கொரோனாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு குறித்து தணிக்கை: நாடாளுமன்றக் குழு அறிக்கை
இந்தியாவின் எல்லைப்பகுதியில் உள்ள 1000 சதுரகிலோமீட்டர்பரப்பு நிலப்பகுதியை எந்தவிதமான சண்டையும், போராட்டமும் இன்றி சீனாவுக்கு பிரதமர் மோடி தாரைவார்த்துவிட்டார். இழந்த அந்தப் பகுதியை மத்தியஅரசு எவ்வாறு மீட்கும் என்று விளக்கம் அளிக்க முடியுமா.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.