VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா
படம் குறித்த நல்ல கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்த படத்தைக் காண காத்திருப்பதாகவும் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.
முன்னதாக மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டிருந்த சிம்பு தற்போது மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் இணைந்துள்ள வேந்து தணிந்தது காடு திரை கண்டுள்ளது. மாநாடு இதுவும் அளவிற்கு இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பு, கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே 2.o, சர்க்கார், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான பல படங்களுக்கும் வசனம் எழுதியவர். இந்த படத்திற்கு உடை வடிவமைப்பாளராக இயக்குனர்கள் சகோதரி உத்திரா மேனன்பணியாற்றியுள்ளார்.
இன்று அதிகாலை காட்சி சுமார் 200 திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிம்புவின் ரசிகர்கள். நேற்று இரவு முதலே இந்த கொண்டாட்டம் துவங்கி விட்டது. திரையரங்குகளில் தெறிக்க விட்டு வருகிறது வெந்து தணிந்தது காடு. அப்படி என்னதான் இந்த படத்தின் கதை என்பதை பார்க்கலாம்... முத்து என்கிற 19 வயது இளைஞன் ஒரு விபத்து காரணமாக பிழைப்பு தேடி மும்பைக்குச் செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் இடம் சிக்கிக் கொள்ளும் நாயகன் பின்னர் தானே மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக உருவெடுக்கும் கதைக்களத்தை கொண்டுள்ளது இந்த படம்.
மேலும் செய்திகளுக்கு...HBD Ramya Krishnan : சிவகாமி தேவியாய் மனங்களில் நின்ற ரம்யா கிருஷ்ணன்!ஸ்ரீதேவிக்கு பதில் இவர் நடித்த காரணம்
முதல் பாதியில் கிராமத்து இளைஞனான முத்துவை பிரதிபலிக்கும் சிம்பு வட்டார வழக்கு, உடல் மொழியென அசத்தியிருக்கிறார். சில இடங்களில் மட்டும் வரும் முத்துவின் தாயாக ராதிகா வேலையை சரியாக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இயக்குனர் முன்னரே குறிப்பிட்டது போலவே படம் முதல் பாதியில் மிக மெதுவாகவே செல்கிறது. பின்னர் இடைவெளியை தொடர்ந்து அதிரடி கிளைமேக்ஸ் வரை தொடர்கிறது.
இரண்டாம் பாதியில் சிம்பு அதிரடி காட்டியுள்ளார். முதல் பாதியில் நாயகிக்கு முக்கியமான வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அதோடு ஏ ஆர் ரகுமானின் இசையும் பிஜியமும் தெறிக்க விடுகிறது. இருந்தாலும் கௌதம் வாசுதேவனின் முந்தைய படங்கள் போலவே சம்பந்தமில்லாமல் இதிலும் கிளைமாக்ஸ் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சிறு குற்றச்சாட்டும் உள்ளது. அதாவது இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதை முன்னதே அறிவிக்கப்பட்டதன் படி இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை
அதோடு சிலருக்கு படம் முற்பகுதிகள் மிகவும் மெதுவாக செல்வது பிடிக்கவில்லை என்றும் கமெண்ட்கள் எழுந்து வருகிறது. இருந்தும் முந்தைய கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணியில் உருவான இரு படங்களை காட்டிலும் இந்த படம் ஆக்சன் அதிரடியாக இருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது சிம்பு படம் குறித்து பிரபல நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் பக்கத்தில், 'படம் குறித்த நல்ல கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்த படத்தைக் காண காத்திருப்பதாகவும் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.