நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களை தான்,  அடிப்படை தொண்டர்கள் அதிமுக எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

பண்ருட்டி ராமசந்திரனோடு சந்திப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ளஅதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பும் ஒன்றினைய வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் சசிகலா கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டது. இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளை சசிகலா மற்றும் ஓபிஎஸ் சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து நேற்று ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்தார். 

திமுகவுக்கு எதுக்கு ஓட்டு போட்டோம் என்று மக்கள் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. போட்டு தாக்கும் வானதி சீனிவாசன்.!

அரசியல் பயணம் ..?

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் மூத்த முன்னோடி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இயக்கத்துக்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசினோம். நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பின்னடைவு சந்தித்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களை தான், அடிப்படை தொண்டர்கள் அதிமுக எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதாவை பார்ப்பதை போல் மக்கள் என்னை பார்க்கிறாங்க.! அதிமுகவில் நடக்கபோவதை பொறுத்திருந்து பாருங்கள்- சசிகலா