இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. அந்தர் பல்டி.. ஆ.ராஜா பங்கமாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி..!
நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.
இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராஜா;- நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.
இதையும் படிங்க;- ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரம்… மௌனம் காக்கும் திமுக… செய்தியாளர்களிடம் இருந்து நழுவும் சேகர்பாபு!!
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக தலைவர்களான அண்ணாமலை, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் ஆ.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆ.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்! என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆ.ராஜா அந்தர் பல்டி அடித்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- அந்தர் பல்டி யாதெனில்... எந்த அரசனை விடவும், ராஜாவை விடவும் இந்து மதம் பெரியது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. நேற்று இவர் சூத்திரன் விபச்சாரி மனக் என்று திட்டியது சொந்த கட்சியினரையும், குடும்பத்தினரையுமே அதிகம் பாதித்தது. எனவே இப்போது பாதுகாப்பான பொய்களை நோக்கி நாடுகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா.. அவரை கைது செய்யுங்க.. கூட்டணிக்கு குண்டு வைக்கும் காங்கிரஸ் நிர்வாகி..!