மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா.. அவரை கைது செய்யுங்க.. கூட்டணிக்கு குண்டு வைக்கும் காங்கிரஸ் நிர்வாகி..!

 இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

A. Raja who belongs to a different religion.. Americai Narayanan

மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. அப்போதுது, பேசிய ஆ.ராஜா;- நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இதையும் படிங்க;- சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

A. Raja who belongs to a different religion.. Americai Narayanan

 இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக போன்ற கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஆ.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

A. Raja who belongs to a different religion.. Americai Narayanan

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில;- இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

 

திமுகவில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி இதுபோன்று கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios