Sani Peyarchi 2022: சனியில் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் பலன் உண்டு... உங்கள் ராசிக்கு என்ன பலன்.?
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவானின் நிலை மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும்.
Sani Peyarchi 2022 Palangal
நவகிரங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படும், சனி பகவான் ஒருவருக்கு நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். சனி கிரகம் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, சனி பெயர்ச்சியால் தங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து வைத்து கொள்வார்கள்.
Sani Peyarchi 2022 Palangal
ஏனெனில், சில ராசிகளுக்கு சனி பகவான் கொடூர கிரகமாகவும் இருக்கிறார். அப்படியான, சனி பகவான் 23 அக்டோபர் 2022 முதல் மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தை துவக்கவுள்ளார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022 Palangal
கடகம்
சனி பகவான் கடக ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட ராசிகள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
Sani Peyarchi 2022 Palangal
துலாம்
துலாம் ராசியில் சனி பெயர்ச்சியால் சுப பலன்கள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் வாழ்வில் பணப் பற்றாக்குறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முதலீடு லாபகரமாக இருக்கும். அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
Sani Peyarchi 2022 Palangal
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். உங்களது வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலுக்கான வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சண்டைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.