Asianet News TamilAsianet News Tamil

ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பதவிக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கணினி வழி தேர்வு நடத்தப்படும் . அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

BHEL recruitment notification 2022 for Engineers, Executive Trainee post
Author
First Published Sep 15, 2022, 11:55 AM IST

நிறுவனத்தின் பெயர்: Bharat Heavy Electricals Limited (BHEL)

காலி பணியிடங்கள்: 150 

பணியின் பெயர்: Engineer Trainee and Executive Trainee 

பணியின் வகை: மத்திய அரசு வேலை

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

பெல் நிறுவனத்தில் https://careers.bhel.in/bhel/jsp/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Recruitment of Engineer/Executive Trainees – 2022’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்து விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டும். 

விண்ணப்ப படிவத்தினை முழுவதுமாக நன்றாக படித்து, கவனமாக நிரப்ப வேண்டும். இறுதியாக, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.

எதிர்கால தேவைக்காக விண்ணப்பதாரர்கள் அதனை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

விண்ணப்பக்  கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது ரூ.500 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஓபிசி, இடபிள்யூசி, எஸ்.சி. எஸ்.டி, PWD, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் ஜிஎஸ்டி யுடன் சேர்த்து ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தினால் போதும். 

மேலும் படிக்க:கெயில் நிறுவனத்தில் 282 காலிப் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்..

வயது வரம்பு: 

Engineer Trainee பதவிக்கு அதிகபட்ச வயது 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Executive Trainee (Finance and HR) பதவிக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 29 க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

பொறியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் (Civil, Mechanical, Electrical, Chemical)அல்லது தொழில்நுட்பத்தில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் அல்லது அந்தந்தத் துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இரட்டைப் பட்டப்படிப்புப் படிப்பை முடித்திருக்க வேண்டும்

எக்ஸிகியூட்டிவ் டிரெய்னிக்கு (நிதி) பதவிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் ( Chartered or Cost and Works Accountants ) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (HR) க்கு பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 60 % மதிப்பெண்களுடன் முழுநேர இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, 55% சதவீத தேர்ச்சி மதிப்பெண்களுடன் அந்தந்தத் துறையில் இரண்டு வருட முழுநேர முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோவும் முடித்திருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

 பயிற்சி காலத்தில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும். அதே போல், பயிற்சி முடிந்து பதவி உயர்வு கிடைத்தவுடன் மாதம் சம்பளமாக Rs 60,000 to Rs 1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி வழி தேர்வு நடத்தப்படும் . அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..
 

Follow Us:
Download App:
  • android
  • ios