செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் விஜய் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றனர். இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களை பற்றி அப்டேட் வெளியாகி வருகிறது.

10:38 PM (IST) Jan 31
கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைக்கக்கூடாது என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
09:10 PM (IST) Jan 31
பாஜக நிர்வாகிகள் 5 பேர் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
08:40 PM (IST) Jan 31
பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
07:33 PM (IST) Jan 31
குழந்தை பிறந்த தகவலை மகிழ்ச்சி உடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் அட்லீக்கும் அவரது மனைவி பிரியாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க
07:30 PM (IST) Jan 31
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
06:44 PM (IST) Jan 31
ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
05:59 PM (IST) Jan 31
சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
05:36 PM (IST) Jan 31
உடல் எடையை குறைக்க சிரமப்படுகிறீர்களா ? இந்திய காலை உணவுகளை வைத்தே உடம்பில் உள்ள குறிப்பாக வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்கலாம். அவை பற்றி காணலாம்.
05:33 PM (IST) Jan 31
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தேர்வாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
03:44 PM (IST) Jan 31
தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் தான் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத். மேலும் படிக்க
02:53 PM (IST) Jan 31
இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகை குஷ்பூ, அங்கு கால் வலியால் அவதிப்பட்ட தனக்கு சர்க்கர நாற்காலி கிடைக்க தாமதம் ஆனதாக வருத்ததுடன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
02:03 PM (IST) Jan 31
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோ பார்க்க...
01:27 PM (IST) Jan 31
நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
12:46 PM (IST) Jan 31
தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. மேலும் படிக்க
12:17 PM (IST) Jan 31
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தினமும் 11 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படுகின்றன. தினமும் 54 ஆயிரம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன: குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
12:13 PM (IST) Jan 31
பேறுகால விடுமுறை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் உரை
12:10 PM (IST) Jan 31
அடுத்தடுத்த இரண்டு தேர்தலில் நிலையான அரசைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
12:08 PM (IST) Jan 31
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌமதி முர்முவின் உரை நிறைவு பெற்றது.
11:56 AM (IST) Jan 31
மண்வள அட்டை, ஃபசல் பீமா யோஜனா, கிசான் கிரெடிட் கார்டு போன்ற திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கு பெருமளவு உதவியுள்ளன: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:53 AM (IST) Jan 31
மத்திய அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் எந்தவித பாகுபாடுமின்றி உழைத்துள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:51 AM (IST) Jan 31
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நேற்று ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொண்டனர். அங்கு வானிலை மோசமாக இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
11:48 AM (IST) Jan 31
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உலக நாடுகள் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலகிற்கு பல்வேறு தீர்வுகளை இந்தியா வழங்குகிறது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதத்தோடு குறிப்பிட்டார் விரிவான செய்திகளுக்கு...
11:45 AM (IST) Jan 31
ஆயுஷ்மான ஜோஜனா திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 9 ஆயிரம் ஆயுஷ்மான் கேந்திரா மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன: குடியரசுத் தலைவர்
11:41 AM (IST) Jan 31
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 11 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை எளியை மக்கள் இதன் பலன் அடைந்துள்ளார்கள்: குடியரசுத் தலைவர் முர்மு
11:31 AM (IST) Jan 31
நம் நாட்டில் நிலையான மற்றும் தீர்க்கமான அரசு இருப்பதன் பலனாக, 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடியைச் சமாளிப்பதிலும் அதன் விளைவுகளை எதிர்கொள்வதிலும் வெற்றி அடைந்துள்ளது: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:26 AM (IST) Jan 31
வறுமை இல்லாத நாடாக இந்தியா மாறவேண்டும். நடுத்தர வர்க்க மக்கள் செழிப்பாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். பெண்களும் இளைஞர்களும் சமூகத்தையும் நாட்டையும் முன் நின்று வழிநடத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை
11:20 AM (IST) Jan 31
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவதை நேரலையில் காணலாம்.
11:17 AM (IST) Jan 31
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. இந்தியா தனது முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை இல்லை. மாறாக, பிற நாடுகளுக்கு உதவும் நிலையை அடைந்துள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:14 AM (IST) Jan 31
2047ஆம் ஆண்டுக்குள் நமது பழம்பெருமையையும் நவீன மயத்தையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவோம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
11:07 AM (IST) Jan 31
நாடாளுமன்ற கூட்டுக்கூடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். இது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் அவர் நிகழ்த்தும் முதல் உரை ஆகும்.
10:52 AM (IST) Jan 31
விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் 33 வயது பெண் வீட்டை வீட்டு வெளியேறி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
10:50 AM (IST) Jan 31
2023-24ம் ஆண்டில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான செய்திகளுக்கு
10:45 AM (IST) Jan 31
தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் இட நெருக்கடியால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தலைமைச்செயலகத்தை மாற்றம் செய்ய திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..
10:00 AM (IST) Jan 31
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய நிலையில், அதிமுக சார்பாக வேட்பாளர் பெயர் அறிவிக்காமல் பதுங்கும் நிலையில் உள்ளது.
09:35 AM (IST) Jan 31
நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
09:23 AM (IST) Jan 31
ஆரணி காவல்துறை. காவல்நிலையம் வந்த வி.சி.க. மாவட்ட தலைவர் ஆய்வாளரை சாதி சொல்லி தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்தது காவல்துறை. ஜாமினில் வெளியில் வந்த வி.சி.கவினர் காவல்துறையை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக போனதுடன், காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
09:15 AM (IST) Jan 31
ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்றி விட்டு தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்.? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
08:46 AM (IST) Jan 31
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:04 AM (IST) Jan 31
தாய்மொழியில், மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் வேண்டுகோளை, தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சியடைகிறோம் என அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
07:30 AM (IST) Jan 31
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தி.நகர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.