கணவரை கழற்றிவிட்டு பள்ளி காதலனுடன் இளம்பெண் எஸ்கேப்.. ஸ்கெட்ச் போட்டு படுகொலை.. நடந்தது என்ன? பகீர் தகவல்.!
சுதா சந்தரும், ராகவி என்ற பெண்ணும் பள்ளியில் படித்தபோதே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ராகவிற்கு வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழலை அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுதா சந்தர் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு வில்லிவாக்கம் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுதா சந்தரை வழிமறித்து தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுதா சந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- லவ் பண்றேன்னு சொல்லிட்டு.. உன்னுடைய நண்பர்களுக்கு என்னை விருந்தாகிட்டியே.. கதறிய பள்ளி மாணவி..!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுதா சந்தர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா சந்தரும், ராகவி என்ற பெண்ணும் பள்ளியில் படித்தபோதே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ராகவிற்கு வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு ராகவி, சுதா சந்தருடன் குடும்பம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ராகவியின் சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.