அமித்ஷாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி..! ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

தாய்மொழியில், மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் வேண்டுகோளை, தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சியடைகிறோம் என அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Annamalai said that he is happy with the Tamil Nadu government initiative to conduct medical studies in Tamil

தமிழில் மருத்துவ படிப்பு

கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் பாடத்திட்டம் தமிழில் தொடங்கப்பட்டது. இதனையடுத்து பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளும் தமிழ் மொழி பெயர்க்கப்பட்டு பயிற்றுக்குவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆங்கில திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்தநிலையில் மருத்துவ படிப்பும் தமிழில் நடத்த வேண்டும் கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக இருந்தது. குறிப்பாக மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பு, மொத்தம் 5 அரை ஆண்டுகள் படிப்பாகும், நான்கரை ஆண்டு பாடப்படிப்பும், ஓராண்டு பயிற்சியுமென மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இந்த பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் உடனடியாக ஆங்கிலத்தில் பாடங்களை கவனிப்பது சற்று சிரமமான நிலை இருந்தது. 

அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Annamalai said that he is happy with the Tamil Nadu government initiative to conduct medical studies in Tamil

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்

இந்தநிலையில் தமிழக அரசும் மருத்துவ பாடப்படிப்பை தமிழில் நடத்துவதற்கு ஏதுவாக புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பேராசிரியர்களை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.  இந்தநிலையில் தமிழில் மருத்துவ படிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நவம்பர் 12, 2022 அன்று, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள், தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை பயிற்று மொழியாகத் தொடங்கினால், தமிழ் வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதனைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், 14 மருத்துவ புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

மகிழ்ச்சி அடைகிறோம்- அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ENT மாநாட்டில் பேசுகையில்,  மருத்துவக் கல்வி புத்தகங்களை தமிழக அரசு சமீபத்தில் தமிழில் வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார். தாய்மொழியில், மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் வேண்டுகோளை, தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சியடைகிறோம் என அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேமுதிக வேட்பாளரை திரும்ப பெற்று அதிமுகவுக்கு ஆதரவா? எல்.கே.சுதீஷ் சொன்ன பரபரப்பு விளக்கம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios