தேமுதிக வேட்பாளரை திரும்ப பெற்று அதிமுகவுக்கு ஆதரவா? எல்.கே.சுதீஷ் சொன்ன பரபரப்பு விளக்கம்..!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் கூட்டணியிலிருந்து வெளியறேியது. இதனையடுத்து, டிடிவி.தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் கூட்டணியிலிருந்து வெளியறேியது. இதனையடுத்து, டிடிவி.தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க;- தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் திமுகவில் இணைகிறாரா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே போட்டியிடுகிறது. ஆனால் யார் வேட்பாளர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்தை தலைமை அறிவித்தது. இந்தச்சூழலில் ஆனந்த் தேமுதிகவில் இருந்து திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், தேமுதிக தனது வேட்பாளரை திரும்ப பெற்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறதா என சந்தேகம் எழுந்தது. இதனால், தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பானது. இந்நிலையில் இந்த தகவலை எல்.கே. சுதீஷ் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க;- கூட்டணி கட்சி என்பதற்காக பாஜகவிடம் ஆதரவு கேட்டோம்..! கொடுத்தால் சரி..! இல்லைனா..? மாஜி அமைச்சர் பரபரப்பு தகவல்
இதுகுறித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். வரும் 1-ம் தேதி ஈரோட்டில் தனது தலைமையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.