கூட்டணி கட்சி என்பதற்காக பாஜகவிடம் ஆதரவு கேட்டோம்..! கொடுத்தால் சரி..! இல்லைனா..? மாஜி அமைச்சர் பரபரப்பு தகவல்
அதிமுகவை விட்டு ஓபிஎஸ்ஐ ஏற்கனவே நீக்கி விட்டோம். அவர் புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார் அதற்கான குழுவை அறிவித்து இருப்பார் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கட்சியை சிறப்பாக இபிஎஸ் வழிநடத்துகிறார்
நெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வழிநடத்தப்பட்டு வரக்கூடிய இயக்கம் என குறிப்பிட்டார். தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.
பிரபல ரவுடியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த மர்ம கும்பல்..! தூத்துக்குடியில் பரபரப்பு
பாஜக ஆதரவு கொடுத்தால் ஓகே
ஓ பன்னீர்செல்வத்தின் செயல்பாடு கட்சியில் எப்படி இருந்தது என்பதை நாடறியும் புதிதாக நாங்கள் சொல்லி தெரியப்போவதில்லை என கூறினார். ஓ.பன்னீர் செல்வம் புதியதாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதிமுகவை விட்டு ஏற்கனவே ஓபிஎஸ்யை நீக்கி விட்டோம் அவர் கட்சி தொடங்கி அவர் கட்சிக்கான ஒரு குழுவை அறிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியிடம் ஆதரவு கேட்க வேண்டியது தார்மீக உரிமை, இதன்படி பாஜகவிடம் ஆதரவை கேட்டோம் ஆதரவு கொடுத்தால் சரி , இல்லையென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக தனது பயணத்தை தொடரும். ஜனநாயக ரீதியில் முறைப்படி நாங்கள் உங்களிடம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க அவர்களிடம் சென்று பேசியதாக தெரிவித்தார்.
எங்க அணிக்கு தான் இரட்டை இலை
அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாரா என பாஜகவிடம் கேட்டுள்ளோம் வரவில்லையென்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திப்போம். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும். அதிமுகவில் நான்கு அணியும் இல்லை, ஏழு அணியும் இல்லை ஒரே அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பின்னால் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் உள்ளதாக தளவாய் சுந்தரம் கூறினார்.
இதையும் படியுங்கள்